திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் தமிழக முதல்வர்.. லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் கூட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் அலை போல் திரண்டு உள்ளது. கடந்த 2018 மே 8 -ஆம் தேதி அன்று மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் ஆனது பீனிக்ஸ் பறவை போல் கட்டப்பட்ட கட்டுமானப்பணி முடிவுற்ற நிலையில், தமிழக முதல்வர் இன்று ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகிய முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். எனவே இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர்,

eps-cinemapttai

‘நூறு ஆண்டுகள் ஆனாலும், அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. அது ஒரு எஃகு கோட்டை. மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசியதை இப்பொழுது நான் உங்களுக்கு நினைவு கூறுகிறேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை நமதாக்குவோம். ஆகையால் ஜெயலலிதா ஆட்சி தொடர நாம் வீர சபதம் எடுப்போம்’ என்று எடப்பாடியார் சூளுரைத்தார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மக்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆகையால் திரளான மக்கள் கூட்டமும், அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending News