வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வெற்றி நடை போடும் தமிழகம் – பிரச்சாரத்தைத் தொடர்ந்து, மற்றொரு வியூகத்தை திட்டமிட்டுள்ள தமிழக முதல்வர்

வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல் அதிமுக கட்சி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பின் அடிப்படையில் சென்ற நான்கு ஆண்டு காலமாக அதிமுக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு வருகிறது.

மேலும் தற்போது ‘திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!’ என்ற நிகழ்ச்சியின் மூலம், திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது செய்த அனைத்து சட்ட விரோத செயல்களையும் மக்களுக்கு ஆதாரத்துடன் நிரூபிக்க முடிவெடுத்துள்ளது அதிமுக அரசு.

இதற்காக டுவிட்டரில் துவங்கப்பட்ட இந்த பிரச்சாரம் சில வினாடிகளில் காட்டுத்தீயாய் பரவி அனைவரையும் சென்றடைந்தது என சொல்லலாம். எனவே இந்த பிரச்சாரத்தின் மூலம் திமுக அரசின் ஆட்சியின் போது நடந்த அதிகார துஷ்பிரயோகம், ரவுடிகளால் ஏற்பட்ட துன்பங்கள், மின்வெட்டால் தொழில் ரீதியாக அவதிப்பட்டது, நில அபகரிப்பு, ஊழல் குற்றசாட்டு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவை அனைத்தையும் அனுபவிக்க மீண்டும் மக்கள் முன்வர மாட்டார்கள். மக்களுக்கு இவை அனைத்தையும் வாரத்திற்கு ஒரு பிரச்சனையாக இந்த பிரச்சாரத்தின் மூலம் விளக்க உள்ளது அதிமுக அரசு.

அத்துடன் இந்த பிரச்சனைகளின் மொத்த புள்ளி விபரமும், விளக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியும் ஆதாரத்துடன் நிரூபிக்க உள்ளதாக அதிமுக அரசு திட்டவட்டமான முடிவை எடுத்துள்ளது.

மேலும் வருகின்ற தேர்தலில் மக்கள் அனைவரும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, சிந்தனை செய்து செயல்பட வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Trending News