திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பிரச்சாரத்தின் போது அழுத குழந்தையை, சமாதானப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்த தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்னும் ஒரு சில மாதங்களில் அதாவது ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால் கட்சிகளிடையே, யார் தமிழகத்தில் முதல்வராகுவார்கள்? என்ற பெரும் போட்டி நிலவி வருகிறது.

இந்த சூழலில் அதிமுக கட்சியின்முதல்வர் வேட்பாளரான தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

எனவே தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூக்கி அணைத்து, சமாதானப்படுத்தி மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்தார்.

eps-cinemapettai

இந்த சம்பவமானது பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் மக்களிடம் மத்தியில், செல்லும் இடமெல்லாம் அதிமுக முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆகையால் இந்த தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல் தமிழக முதல்வரும் சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.

Trending News