திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த சாக்லேட் பாய் ஹீரோ.. கையும் களவுமாக பிடித்து செக் வைத்த மனைவி

எந்த புத்துக்குள் எந்த பாம்பு இருக்குமோ தெரியவில்லை. வெளி உலகத்திற்கு முன் அமுல் பேபி மூஞ்சை வைத்துக்கொண்டு சீன் போடும் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் கொடூர முகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படித்தான் சாக்லேட் பாய் ஹீரோ ஒருவரின் உண்மை முகமும் வெளிவந்திருக்கிறது.

சின்னத்திரையில் இவர் அறிமுகமானதே பிரபல இயக்குனரின் சீரியலில் தான். சினிமா ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட அந்த சீரியலின் மூலம் நடிகருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளும் கிடைத்தனர். அதிலும் அந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினின் ரொமான்ஸ் வெகு பிரபலம்.

ஆனால் விரைவிலேயே முடிவுக்கு வந்த அந்த சீரியலை அடுத்து நடிகருக்கு மற்றொரு வாய்ப்பும் கிடைத்தது. அதிலும் மனிதர் ஹீரோயினுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். இப்படி சாக்லேட் பாய் ஹீரோவாக இருந்த இவருடைய வண்டவாளம் தற்போது வெளிவந்திருக்கிறது.

Also read: காமெடி நடிகையின் வாழ்க்கையை அழித்த நகைச்சுவை நடிகர்.. கடைசி வரை திருமணம் ஆகாமல் போன கொடுமை

அதாவது நடிகருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால் இப்போது அதுவே முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. ஏனென்றால் சாக்லேட் பாய் ஹீரோ என்று நினைத்துக் கொண்டிருந்த இந்த நடிகர் உண்மையில் ஒரு பிளே பாயாம்.

பெண்களை கண்டாலே போதும் உடனே கடலை போட ஆரம்பித்து விடுவாராம். அப்படி இவரின் வலையில் விழுந்த பெண்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இதை அறிந்த மனைவி இப்போது இவரை கையும் களவுமாக பிடித்ததோடு போலீசிலும் கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தால் நடிகர் தன் மனைவியை அவதூறாக பேசி அடித்தும் இருக்கிறார். இப்படி இவருடைய க்ரைம் ரேட் ஏறி போன நிலையில் இவரை வளைத்துப் பிடிக்கவும் தீவிர முயற்சி நடந்து வருகிறதாம். ஆனால் நடிகர் தான் போலீஸ் கையில் சிக்காமல் போக்கு காட்டி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: 2 வருட டேட்டிங் செய்த பின்பே திருமணம்.. வில்லன் நடிகரின் அந்தரங்க சேட்டை

Trending News