செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

லவ் மூடுக்கு மாறிய சாக்லேட் பாய்.. சிக்காமல் எஸ்கேப் ஆகும் விஷ பாட்டில், சுவாரஸ்யமாகும் பிக்பாஸ்

Biggboss 7: பிக்பாஸ் என்றாலே சண்டைக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் காதலுக்கும் குறை இருக்காது. கடந்த சீசன்களில் இப்படி ஜொள்ளு விட்டுக் கொண்டு திரிந்த எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆளுக்கு ஒரு பக்கமாக அவர்கள் பிரிந்த கதையும் உண்டு.

அந்த வகையில் இந்த சீசனில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட மணி, ரவீனா காதல் இன்னும் சூடு பிடிக்கவில்லை. அதனாலேயே சாக்லேட் பாய் விஷ்ணு லவ் மூடுக்கு மாறி கன்டென்ட் கொடுப்பதற்கு தயாராகி விட்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள போட்டியாளர் தான் பூர்ணிமா. ஆனால் அவர் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார் போல.

ஏனென்றால் ஆரம்பத்திலேயே விஷ்ணு உங்க மூக்கு கிளி மாதிரி இருக்கு என்று ஜொள்ளு விட்டு ஒரு பிட்டை போட்டார். அது அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. ஆனால் புறணி பேசுவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் அந்த விஷப்பாட்டில் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் விஷ்ணு கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்ய முயன்று வருகிறார். அதிலும் அவர் பூர்ணிமாவிடம் நீ எப்போ என்ன முதல் தடவையா பார்த்த என்று கடலை போட்டார். அதற்கு அவரோ நான் ஸ்கூல் படிக்கும்போது ஆபீஸ் சீரியல்ல என்று கூறி ஷாக் கொடுத்தார். உடனே ஆடிப்போன விஷ்ணு எங்க கணக்கு சொல்லு பார்க்கலாம் என்று கேட்டார்.

உடனே சுதாரித்துக் கொண்ட பூர்ணிமா அப்போ கனா காணும் காலங்கள் சீரியலாக இருக்கும் என்று கேசுவலாக கூறினார். இதிலிருந்து அவர் உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆனாலும் அது புரியாத விஷ்ணு இன்னும் லவ் மூடிலயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்படி பிக் பாஸ் வீட்டில் சுவாரசியமான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதில் விஷ்ணுவின் லவ் ட்ராக் தான் சோசியல் மீடியாவில் கலகலப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் கடந்த வாரம் பயங்கர வில்லத்தனத்தை காட்டிய விஷ்ணுவுக்கு அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனாலேயே அவர் இனிமேல் தனக்கு ஏற்றது போல் லவ் ரூட்டுக்கு மாறிவிடுவார் என்ற கருத்துக்களும் கிளம்பியுள்ளது.

Trending News