ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

யாரும் எதிர்பாராத பாரதிகண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸ்.. 2ம் பாகத்திற்கு போட்ட பிள்ளையார் சுழி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், இன்னும் சில தினங்களில் நிறைவடைய போகும் இந்த சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கேற்றார் போல் அதிரடி திருப்பங்கள் வரிசையாக அரங்கேறிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் மூலம் கண்ணம்மா குற்றமற்றவர் என்பதை பாரதி புரிந்து கொண்டார்.

Also Read: விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

அதன்பிறகு வெண்பாவும் இவ்வளவு நாள் செய்த துரோகத்தை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு காண்பித்து விட்டார். அதன்பின் வெண்பாவின் அம்மாவே வெண்பாவை போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவார். பின் கண்ணம்மாவின் காலில் கதறி அழும் பாரதி தன்னை மன்னித்துக் கொள் என்று கெஞ்சுகிறார்.

மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையால் எல்லாம் சரியாகிவிடுமா! என கண்ணம்மாவும் பாரதியை வெளுத்து வாங்குகிறார். ஒரு கட்டத்தில் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்ள தயாராகி விடுவார்.

ஆனால் அவர்களது குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாரதியை மன்னிக்க தயாராகவில்லை. ஆகையால் இனி வரும் நாட்களில் பாரதியை வெறுத்து ஒதுக்கப் போகின்றனர் ஹேமா மற்றும் லட்சுமி. இத்துடன் பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் நிறைவடைய போகிறது.

Also Read: படையப்பா படத்தை காப்பி அடிச்சுட்டாங்களே.. கிளைமாக்ஸில் கூட சுவாரசியம் இல்லாமல் சப்புனு முடியும் பாரதிகண்ணம்மா

மேலும் பாரதியை கதறவிடும் இரண்டு குழந்தைகள் மூலம் சீரியலின் இயக்குனர் 2ம் பாகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார். இதன்பின் 2ம் பாகத்தில் வளர்ந்த நிலையில் லட்சுமி மற்றும் ஹேமாவை சுற்றி தான் கதை இருக்கும். இதில் ஹேமா ஆட்டோ டிரைவராகவும் லஷ்மி படித்து டாக்டராகவும் மாறிவிடுவார்.

இப்படி இருக்கும் கதைக்களம் தான் இரண்டாம் பாகத்தில் தொடர போகிறது. இப்போது கிளைமாக்ஸில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலின் விறுவிறுப்பு 2-ம் பாகத்திலும் இருந்தால் நிச்சயம் டிஆர்பி-யில் கொடி கட்டி பறக்கும் என்றும் சின்னத்திரை ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: இவங்க பைத்தியமா! இல்ல நம்ம பைத்தியமானே தெரியலையே.. கிளைமாக்ஸில் கதற விடும் பாரதிகண்ணம்மா

Trending News