திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காமெடி நடிகையின் வாழ்க்கையை அழித்த நகைச்சுவை நடிகர்.. கடைசி வரை திருமணம் ஆகாமல் போன கொடுமை

கோலிவுட்ல துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின் சிறந்த நகைச்சுவை நடிகையாக உச்சம் பெற்ற காமெடி நடிகை ஒருவர், இப்போது தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் தொலைத்து நிற்கிறார். இதற்கெல்லாம் அந்த நகைச்சுவை நடிகர் தான் காரணம். தொடக்கத்தில் இவர்கள் இருவரின் காம்போ பக்காவாக ஒர்க் ஆனது.

இதனால் 90களில் இவர்களுக்கிடையே ஏற்படும் அடிதடி மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. இதனால் டாப் நடிகர்களின் படங்களில் இந்த காமெடி நடிகை நகைச்சுவை நடிகரை அடிக்கும் காட்சிகளை அதிகப்படுத்தி வந்தனர். அந்த நகைச்சுவையால் நடிகைக்கு திரையுலகிலிருந்து இருந்து பாராட்டுகள் குவிந்தது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த காமெடியன் நடிகை தன்னைவிட அதிகம் ஸ்கோர் செய்து விடுவாரோ என பொறாமையில் பொசுங்கி, அடுத்தடுத்த படங்களில் அந்த நடிகையுடன் நடிக்க முடியாது என்று புறக்கணித்தார். நடிகை இருக்கும் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று அடாவடியாய் சொன்னார்.

இதனால் நகைச்சுவை நடிகரை இழக்கக்கூடாது என நினைத்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து நடிகையை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் ஒதுக்கினர். இதனால் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் இழந்து சினிமா கெரியரே இல்லாமல் போனது.

Also Read: பாய் பிரண்டுக்கு குட்பை சொன்ன வெளிச்ச நடிகரின் ஜோடி.. இளம் நடிகையுடன் போடும் ஆட்டம்

நடிகையின் திரை வாழ்க்கை அவ்வளவுதான் என்று கூறப்பட்ட நிலையிலும், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இருப்பினும் தமிழில் பேசப்பட்ட அளவுக்கு அவரால் அக்கட தேசத்தில் உச்சம் பெற முடியவில்லை. இதனால் கெரியரை தொலைத்து தனது குடும்பத்தையும் உடன் பிறந்தவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் கடைசிவரை திருமணம் செய்யாமலே ஒண்டிக்கட்டையாய் இருந்து விட்டார்.

இவருடைய சினிமா கெரியரை காலி செய்தது அந்த நகைச்சுவை நடிகர் தான். இந்த நடிகையை மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து படங்களில் நடித்த சின்னசின்ன காமெடியன்களையும் இவர் வளர விடாமல் குழி தோண்டி புதைத்து விட்டார். இந்த கெட்ட எண்ணத்திற்காகத்தான் இப்போது படாத பாடுபட்டு ஒரு வழியா தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கி இருக்கிறார். இருந்தாலும் முன்பு போல், படங்களில் இவருடைய காமெடி எதுவும் செல்லுபடி ஆகுவதில்லை.

அதேசமயம் காமெடி நடிகை திருமணம் ஆகவில்லையே என துளி கூட கவலைப்படாமல் பறந்த உள்ளமும் இரக்க குணமும் நிறைந்தவராய் தனது உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைத்து கண்டிப்பாக வளர்த்து வருகிறார். அதுமட்டுமல்ல ஏழை குழந்தைகளுக்கும், முதியோர் இல்லத்திற்கும் அவரால் முடிந்த உதவியை செய்து வருகிறார். இவரைப் போல் இன்று வரை அப்படி ஒரு காமெடி நடிகை இன்னும் தமிழ் சினிமாவில் உதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

Also Read: இந்த பூனையும் பால் குடிக்குமா.? செல்பி எடுக்க வந்த பெண்ணிடம் நடிகர் செய்த சேட்டை

Trending News