ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஞ்சலியை தொடர்ந்து ராம் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி

பொதுவாக பல இயக்குனர்கள் கமர்சியல் படங்களை கொடுத்து வரும் நிலையில் சமூகத்திற்காக நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று அக்கறையுடன் படங்களை எடுப்பவர் இயக்குனர் ராம். அதிலும் இவருடைய படங்களில் தமிழ் சார்ந்த விஷயங்கள் நிறைய இடம் பெறும்.

அந்த வகையில் அஞ்சலி மற்றும் ஜீவா நடிப்பில் முதல் முதலாக கற்றது தமிழ் படத்தை ராம் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கி வந்த ராம் நடுவில் மிகப்பெரிய பிரேக் எடுத்தார். இப்போது மீண்டும் அஞ்சலியை வைத்து ஏழுமலை ஏழு கடல் என்ற படத்தை முடித்துள்ளார்.

Also Read : தவறான உறவில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அங்காடி தெரு அஞ்சலி

அஞ்சலி இந்த படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதன் மூலம் மீண்டும் தரமான ரீ எண்ட்ரி தமிழ் சினிமாவில் கொடுக்கலாம் என்று அஞ்சலி நம்புவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராம் அஞ்சலியை தொடர்ந்து அடுத்ததாக காமெடி நடிகர் ஒருவரை வைத்து படம் இயக்க உள்ளார். அதாவது மிர்ச்சி சிவா உடன் ராம் இணைய உள்ளாராம். இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அதாவது மிர்ச்சி சிவா முழுக்க முழுக்க காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

Also Read : வெப் சீரிஸில் அதிக ஆர்வம் காட்டும் பிரபலங்கள்.. பல மடங்கு லாபம் பார்க்கும் அஞ்சலி

ஆனால் நாம் கருத்துள்ள படங்கள் மட்டுமே எடுப்பதால் இவர்கள் கூட்டணியில் படம் எப்படி அமையும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் காரணம் இல்லாமல் இயக்குனர் ராம் மிர்ச்சி சிவாவை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார். கண்டிப்பாக அதில் ஒரு விஷயம் இருக்கும் என்பது தெரிகிறது.

அந்த படம் தமிழ் சினிமாவிற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் கண்டிப்பாக மகிழ்ச்சி தரும் படமாக அமைய உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து கோயமுத்தூரில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : ரு நாளைக்கு 35 பீர், ஒரு லட்ச ரூபாய் .. மிர்ச்சி சிவா படத்துக்கு சங்கு ஊதும் புதிய நடிகர்

Trending News