வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் மூலம் பல கோடிகளை கல்லா கட்டும் தளபதி 67.. ரிலீஸுக்கு முன்னரே மிரட்டிவிட்ட லோகேஷ்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் வேளையில் விரைவில் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஆனால் இப்படம் பூஜை போட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் உரிமையை கைப்பற்றுவதற்கும் பலத்த போட்டி நிலவி வந்தது. அதில் தற்போது முக்கிய நிறுவனங்கள் தளபதி 67 பட உரிமையை பல கோடி விலை கொடுத்து வாங்கி இருக்கிறது.

Also read: அரசியலுக்கு வரவே இல்ல, அதுக்குள்ள ஆல் கடத்தலா.. ரசிகர் மன்றம் செய்த செயலால் தலைகுனிந்த விஜய்!

அந்த வகையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. ஒரு படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே இந்த அளவுக்கு வியாபாரம் ஆகி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதுவே இப்படத்தின் வெற்றிக்கான முதல் படியாகவும் அமைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. தொடர்ச்சியாக விஜய் திரைப்படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் சன் டிவி இந்த படத்தையும் கைப்பற்றி இருக்கிறது. ஆக மொத்தம் இப்போவே தளபதி 67 திரைப்படம் 240 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி கலெக்சன் பார்த்துள்ளது.

Also read: விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.. வாரிசு ரிலீஸ் குறித்து வெளுத்து வாங்கிய பிரபலம்

அந்த வகையில் படத்திற்காக போடப்பட்ட மொத்த பட்ஜெட்டும் தற்போது இந்த பிசினஸ் மூலம் கிடைத்திருக்கிறது. இதை வைத்தே படத்தை முடித்து விடலாம் என்று தயாரிப்பாளர் தற்போது பயங்கர குஷியில் இருக்கிறாராம். இந்த வருட இறுதிக்குள் ஆரம்பமாக இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருட ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ்களும் இருக்கின்றது. இப்போதே படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கமல் நடிக்கப் போகிறார் என்று வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது.

Also read: இப்ப வாங்க ஒரு கை பார்க்கலாம், நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்.. உச்சகட்ட பயத்தில் துணிவு

Trending News