வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலுக்கு வில்லனாக சத்யராஜ் போட்ட கண்டிஷன்.. துண்ட காணும், துணிய காணும் என ஓடிய இந்தியன் 2 டீம்

ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில் உதயநிதி தலையிட்டு பிரச்சனையை சமூகமாக முடித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

Also Read :மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

இப்போது கமலுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. ஷங்கர் இயக்கம் அனைத்து படத்திலுமே சத்தியராஜிடம் வில்லன் ரோலில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் அது தடைபட்டு போனது. தற்போது இந்தியன் 2 படத்திற்கும் ஷங்கர் சத்யராஜை அணுகி உள்ளார்.

இந்த படத்தில் கொடூர வில்லனாக நடிக்க வேண்டும் என்பதால் சத்யராஜ் சற்று பயப்படுகிறாராம். ஏனென்றால் இந்த படத்தின் தாக்கத்தால் அடுத்தடுத்து சத்யராஜ்-க்கு தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்களே வரும். ஆகையால் பாசிட்டிவ் வாய்ப்புகள் சத்யராஜுக்கு குறைய கூடும் என்று பயம் வந்துள்ளது.

Also Read :இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் மீண்டும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்

இந்நிலையில் பயத்தை மீறியும் சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். அதற்கான காரணம் தான் அனைவரையும் தலைசுற்ற வைக்கிறது. அதாவது இந்தியன் 2 படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம் சத்யராஜ்.

எத்தனை நாள் கால்ஷீட் தேவையோ அதற்கேற்றார் போல் ஒரு நாளைக்கு ஒரு கோடி என கணக்கிட்ட சம்பளத்தை கேட்டுள்ளார். இவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் இந்தியன் 2 படக்குழு தலையில் துண்டை போட வேண்டியது தான் என பேசி வருகிறார்கள். ஆனால் தற்போது வரை இது குறித்து ஷங்கர் தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

Also Read :சத்யராஜ் கௌரவ வேடத்தில் அசத்திய 5 படங்கள்.. இந்த கேரக்டர்களில் வேற யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது

Trending News