Vijay: கோட் படம் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் இந்த படத்தை கழுவி ஊற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு நல்ல கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
ஏனென்றால் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா என இவர்கள் சார்ந்த விஷயங்கள் கோட் படத்தில் வெங்கட் பிரபு வைத்திருந்தார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எப்போதுமே விஜய் படத்திற்கு அஜித் ரசிகர் தான் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருவார்கள்.
ஆனால் இந்த முறை வெங்கட் பிரபு அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதாலும் படத்தில் அஜித்தை பற்றிய நல்ல விஷயங்கள் கூறி அவர்களும் கொண்டாடினார்கள். ஆனாலும் ட்விட்டர், மீம்ஸ் போன்றவற்றில் கோட் படத்தை விமர்சிக்கும் படியான விஷயங்கள்தான் வருகிறது.
கோட் விமர்சனத்திற்கு பின்னால் இருந்து நடக்கும் சதி வேலை
இதற்கு காரணம் ஐடி விங் என்று கூறப்படுகிறது. அதாவது விஜய் அரசியல் கட்சிக்குள் நுழைவதால் அவருடைய படத்திற்கு மோசமான விமர்சனத்தை கொடுத்து படத்தின் வசூலை குறைக்க செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அரசியல் கட்சி தான் என்று சொல்லப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் இயக்கம் விஜய்யின் நடிப்பு என படத்தில் பல பாசிட்டிவ் விஷயங்கள் அடங்கியிருந்தது. படத்தின் நீளம் மட்டும் குறைத்து இரண்டரை மணி நேரம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக இன்னும் மிகப்பெரிய ஹிட்டை கோட் படம் கொடுத்திருக்கும்.
மற்றபடி படத்தில் சில குறைகள் இருந்தாலும் இந்த அளவுக்கு ரோல் செய்யும் நிலையில் மோசமாக இல்லை என்பதே நிதர்சனம். விஜய்யின் அரசியல் வருகைதான் இதற்கெல்லாம் காரணம் என சினிமா விமர்சனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.
வசூலை அள்ளியதா கோட்