வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக் பாஸ் ரெக்கார்டை உடைத்த போட்டியாளர்.. இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் பரிதாபம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் 8 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் ரக்ஷிதா மட்டுமே இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெறவில்லை.

ஆகையால் எந்த போட்டியாளர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத பிக் பாஸ் ரெக்கார்டை இந்த சீசனில் ஒரு போட்டியாளர் முறியடித்து உள்ளார்.

Also Read : யாரும் எதிர்பார்க்காத பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி.. டிஆர்பியை தக்க வைக்க மாஸ்டர் பிளான்

ஆனால் அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இவர் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் ஆவார்.

மணிகண்டன் வெள்ளித்திரையிலும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்களில் மணிகண்டன் திறம்பட விளையாடி இருந்தார். ஆரம்பத்தில் அவரது திறமை போட்டியாளர்களுக்கு தெரியவில்லை என்றாலும் போகப் போக தனது திறமையை வெளிக்காட்டினார்.

Also Read : கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

இதுவரை பிக் பாஸ் வீட்டிலேயே ஒரு போட்டியாளர் அதிகபட்சமாக மூன்று முறை தான் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்துள்ளார். ஆனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அந்த ரெக்கார்டை முறியடித்து மணிகண்டன் நான்கு முறை பிக் பாஸ் வீட்டின் தலைவராக பொறுப்பேற்று இருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் மணிகண்டன் ரசிகர்களிடம் குறைந்த வாக்கை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளி திரையில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Also Read : 9 இடங்களும் ஷிவினுக்கு தகுதி இல்லை.. ஒரே டாஸ்கால் கொழுந்துவிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

Trending News