திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டதட்ட 10 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஏனென்றால் கடந்த வாரம் டபுள் நாமினேஷன் நடைபெற்றது.

அதில் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறினர். இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், ரக்ஷிதா, ஜனனி, ஏ டி கே, மணிகண்டன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வரலாற்றிலேயே கிட்டத்தட்ட 10 வாரங்களும் நாமினேஷனில் வராத ஒரு போட்டியாளர் இந்த சீசனில் இடம் பெற்றுள்ளார்.

Also Read : விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

அவ்வாறு வீட்டுக்குள்ளும், வெளியிலும் அந்த போட்டியாளருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை இருக்கிறது. தனது விளையாட்டை சாதுரியமாகவும், சாமர்த்தியமாகவும் விளையாடி வரும் ஷிவின் தான் அவர். பிக் பாஸ் என்ற இந்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சீசனில் நமிதா மாரிமுத்து இதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். ஆனால் ஒட்டு மொத்த திருநங்கை சார்பாக ஷிவின் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். சிலருக்கு திருநங்கை மீது உள்ள தப்பான அபிப்பிராயத்தை ஷிவன் மாற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : சூர மொக்கையாக போகும் பிக் பாஸ் சீசன் 6.. சாட்டையுடன் என்ட்ரி கொடுக்க போகும் ஆண்டவர்

அதாவது ஒவ்வொரு விஷயத்தையும் நிதானத்துடன் கையாள்வது, மற்றவர்களிடம் எப்படி அணுகுவது, விளையாட்டை சுவாரசியமாக்குவது என ஒவ்வொன்றையும் அழகாக புரிந்து செயல்பட்டு வருகிறார். மேலும் விளையாட்டை சுவாரசியமாக்குவதற்காகவும் சில குறும்புத்தனமான வேலைகளை செய்கிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்டில் கண்டிப்பாக ஷிவின் இடம் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்தால் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள். மேலும் நாளுக்கு நாள் ஷிவின் மீது உள்ள மரியாதை ரசிகர்களுக்கு கூடிக் கொண்டே போகிறது.

Also Read : விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

Trending News