வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆஸ்கர் நாயகி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஓட்டின் அடிப்படையில் தகுதி இல்லாத போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

அந்த வகையில் இதுவரை வெளியேறிய நபர்கள் அனைவருமே மக்கள் நினைத்த போட்டியாளர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் இந்த வாரமும் மக்களின் கணிப்பு படியே எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் இந்த வாரம் செரினா பிக் பாஸ் வீட்டை விட்டு மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறுகிறார்.

Also read : பாத்ரூமில் குயின்ஸி காலில் விழுந்த ஜனனி.. தெரியாம செஞ்சதை பில்டப்பாக்கிய பிக்பாஸ்

இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, செரீனா ஆகியோர் இடம் பிடித்தனர். அதில் விக்ரமனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதனால் அவருக்கான ஓட்டுக்களும் எக்கச்சக்கமாக கிடைத்திருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக அசீமுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இவருடைய நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை கொதிப்படைய வைத்தது.

கமலும் அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் இந்த வாரம் அசீமின் நடவடிக்கையில் சற்று மாற்றம் தெரிந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக கதிரவனுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் இவர் எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் அமைதியாகவே வலம் வருகிறார்.

Also read : எதிர்பாராததை நடத்திக் காட்டும் பிக் பாஸ் ஆண்டவர்.. அதிக பிரசங்கித்தனத்தால் வெளியேறும் போட்டியாளர்

இவரை தொடர்ந்து பார்ப்பவர்களை கடுப்பேற்றும் வகையில் நடந்து கொள்ளும் ஆயிஷாவுக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. ஆனால் இவரை காட்டிலும் மிக மிக குறைவான ஓட்டுகள் செரினாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த இருவருக்கும் கிடைத்த ஓட்டுக்களில் மிக குறைவான ஓட்டு வித்தியாசம் தான் இருக்கிறது. அதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செரினா வெளியேறுகிறார்.

கடந்த வாரம் போட்டியின் போது கீழே விழுந்து அடிபட்டதால் காயம் அடைந்த செரினா உயிருக்கு போராடுவது போல் சீன் போட்டார். அதை பார்த்து ரசிகர்கள் ஆஸ்கர் ரேஞ்சுக்கு நடிக்கிறார் என்று கூறி வந்தனர். அதனாலேயே அவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டனர். மக்களின் ஆசைப்படி இந்த ஆஸ்கர் நாயகி தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இணையத்தில் லீக்கான ஓட்டிங் லிஸ்ட்

biggboss-voting
biggboss-voting

Also read : தலைகணத்தில் தலைகால் புரியாமல் ஆடும் போட்டியாளர்.. குட்டு வைக்க போகும் பிக்பாஸ்

Trending News