சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

43% ஓட்டுக்களை வாரி சுருட்டிய போட்டியாளர்.. பிக்பாஸ் ஓட்டிங்கில் நம்பர் ஒன் இவர்தான்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் சண்டை, சச்சரவு இல்லாமல் கொஞ்சம் ஜாலியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தான். அதில் ஒவ்வொருவரும் பிரபலமான கேரக்டர்களின் கெட் அப் போட்டு அசத்தினார்கள்.

இப்படியாக ஜாலியாக இருந்த வீட்டில் அர்த்த ராத்திரியில் எலிமினேஷன் சம்பவமும் நடந்தது. அதன் படி அனன்யா தற்போது வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் இன்று கூல் சுரேஷின் வெளியேற்றமும் நடந்திருக்கிறது.

Also read: பூர்ணிமாவை வைத்து புது வியூகம் போடும் அர்ச்சனா.. இரண்டாக உடையும் Bully Gang

இந்நிலையில் இந்த வாரம் அதிகபட்சமாக 43% ஓட்டுக்கள் வாங்கி தெறிக்கவிட்டு இருக்கிறார் அர்ச்சனா. அதன்படி மொத்தமாக 9 லட்சம் வாக்குகளில் 4 லட்சத்திற்கும் மேல் வாரிசுருட்டி இருக்கிறார். இது இந்த வாரம் மட்டுமல்லாமல் அர்ச்சனா நாமினேட் ஆகும் ஒவ்வொரு வாரமும் நடப்பது தான்.

முதல் வாரத்தில் கொஞ்சம் வெறுப்புகளை சம்பாதித்த இவர் பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்த நாளிலிருந்து அதிக கவனம் பெற்றார். அதைத்தொடர்ந்து இவர் என்ன தப்பு செய்தாலும் அதை ஆதரிக்கும் ஒரு கூட்டமும் சோசியல் மீடியாவில் இருக்கின்றனர்.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சன் டிவியை முந்த முடியாமல் தோற்றுப்போன சேனல்

அதனாலயே தற்போது இவர் பிக்பாஸ் ஓட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷுக்கும் ரசிகர்களின் ஆதரவு பலமாக இருக்கிறது. அதனால் அவர் இரண்டாம் இடத்தையும் அடுத்தடுத்த இடங்களை கூல் சுரேஷ், விஷ்ணு, நிக்சன் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

இதில் ஓட்டு நிலவரப்படி நிக்சன் தான் கடைசி இடத்தில் இருக்கிறார். ஆனால் கூல் சுரேஷ் இந்த பாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு தப்பிக்க சில குரங்கு சேட்டைகளை செய்தார். அதனாலயே அவர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். இது நாளைய எபிசோடில் காட்டப்படும்.

biggboss 7-vote
biggboss 7-vote

Trending News