Vijay Tv: நேரமும் சந்தர்ப்பமும் கிடைத்தால் தான் ஒவ்வொரு கலைஞர்களின் திறமையும் வெளிக்கொண்டு வர முடியும். அதற்கான மேடையும் சரியாக அமைய வேண்டும். அப்படி ஒரு விஷயம் கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்தி விட்டால் நமக்கு தொடர்ந்து வெற்றிகள் வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக பல கலைஞர்கள் வெற்றி நடை போட்டு வருகிறார்கள்.
இந்த லிஸ்டில் விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான ஒருவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பாதியிலேயே எலிமினேட் ஆகி வந்து விட்டார். வந்த கையோடு அவருக்கு புதிதாக ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது சன் டிவியில் 2015 ஆம் ஆண்டு தொடங்கிய கேளடி கண்மணி என்ற நாடகத்தின் மூலம் அர்னாவ் அறிமுகமானார்.
அதன் பிறகு கல்யாணப்பரிசு நாடகத்தையும் வெற்றிகரமாக கொடுத்தார். பின்பு விஜய் டிவிக்கு தாவி செல்லம்மா என்ற சீரியல் மூலம் பல பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தார். ஆனாலும் எதற்கும் அசராத அர்னாவ் செல்லமா நாடகத்தை முடித்த கையோடு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கலந்து கொண்ட இரண்டு வாரங்களிலேயே இவர் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு அமைந்துவிட்டது.
இதன் பிறகு விஜய் டிவிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அந்த சேனலில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழில் நடிக்கும் வாய்ப்பே பெற்றிருக்கிறார். அந்த வகையில் முதல் கட்ட எண்ட்ரியாக தற்போது ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் கெஸ்ட் ரோலில் கமிட்டாகி இருக்கிறார். இதில் இவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து புத்தம் புது சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.