Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்தமாக 18 போட்டியாளர்கள் என்டரி கொடுத்த நிலையில் அடுத்து 3 வாரங்களில் ஆறு போட்டியாளர்கள் புதுசாக உள்ளே நுழைந்தார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஒரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்தார்கள். அதிலும் கடந்த இரண்டு வாரமாக டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டு நான்கு போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள்.
அந்த வகையில் தற்போது வீட்டுக்குள் விளையாடி வரும் போட்டியாளர்கள் யார் என்றால் முத்துக்குமரன், ஜாக்லின், ராணவ், அருண், தீபக், விஷால், பவித்ரா, மஞ்சரி, ரயான், ரஞ்சித், அன்சிதா, சௌந்தர்யா, ஜெஃப்ரி. இதில் தற்போது வரை அதிகமாக ஓட்டு வாங்கிக் கொண்டு வருவது முத்துக்குமரன், ராணவ் மற்றும் சௌந்தர்யா.
ஆனால் தற்போது முத்து குமரன் செய்த ஒரு அசால்ட்தனமான விஷயத்தை மொத்த போட்டியாளர்களும் பாதிப்படைந்து இருப்பதால் அதனை வருந்தும் வகையில் தொடர்ந்து முத்துக்குமரன் பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார். அதாவது இனிமேல் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடையாது என்று சொல்லிய நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது. கம்மியான ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பது ரஞ்சித் தான். 12 வாரங்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் எஸ்கேப் ஆகி கொண்டிருந்த ஒரு போட்டியாளர் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவரை விட சிறப்பாக விளையாடிய திறமையான போட்டியாளர்களும் எதிர்பாராத விதமாக வெளியேறி போய் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் ரஞ்சித் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார். இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருவதால் அடுத்தடுத்து போட்டிகளும் பிரச்சனைகளும் கடுமையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.