வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

5 லட்சத்தை வாங்கிக்கொண்டு விலகிய பிக்பாஸ் போட்டியாளர்! சோகத்தில் தவிக்கும் ஆர்மி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளது .இன்னும் ஒரு சில தினங்களில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். எனவே இறுதிக் கட்டத்தில் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் தினமும் விருப்புடன் பார்த்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பாலாஜி, சோம் சேகர், ஆரி, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா ஆகிய 5 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இவர்களில் ஒருவர்தான் மக்களின் ஓட்டின் அடிப்படையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எனவே  ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில், ஒரு சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ், 5 லட்சத்தை கொடுத்து அத்துடன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை தருவார். அதன்படி இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தை கையில் எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து விலகியுள்ளார் கேப்ரில்லா.

தற்போது கேப்ரில்லா எடுத்திருக்கும் இந்த முடிவு சரிதான். ஏனென்றால் பாலாஜி, ஆரி, ரம்யா பாண்டியனை காட்டிலும் கேப்ரில்லாவிற்கு குறைந்த ஓட்டுக்களே பதிவாகி வருவதால், கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆகையால் ‘எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் வீட்டில் இருந்து வெளியேறுவதை விட, 5 லட்சத்துடன் வெளியேறுவது மேல்’ என்ற நல்ல முடிவை கேப்ரில்லா எடுத்துள்ளார்  என்பது பிக்பாஸ் ரசிகர்களின் கருத்தாகும்.

gabrilla-cinemapettai
gabrilla-cinemapettai

Trending News