Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்த பொழுது விறுவிறுப்பாக இல்லாமல் இருந்தாலும் போகப்போக டாஸ்க் மற்றும் பஞ்சாயத்துக்கள் அதிகரித்து வந்ததால் தற்போது சூடு பிடித்து வருகிறது. அதிலும் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய தனித்திறமையை நிரூபித்துக் காட்டி வெற்றி கோப்பையை கைப்பற்றுவதற்கு திறன் பட செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இப்பொழுது வரை முதல் ஐந்து இடத்தில் இருப்பது முத்துக்குமரன், ராணவ், சௌந்தர்யா, ஜாக்லின் மற்றும் தீபக். ஆனால் முத்துக்குமார் தான் வெற்றி கோப்பை கைப்பற்றுவார் என்று இத்தனை நாளாக எதிர்பார்த்த நிலையில் ஓட்டு மதிப்பெண்கள் சற்று முன்னும் பின்னும் ஆக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் இரண்டு இடத்தில் முத்துக்குமரன் மற்றும் ராணவ் தான் போட்டி போடுகிறார்கள்.
அதிலும் இன்று அடுத்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பவித்ராவிற்கு வேணும் என்றே முத்துக்குமார் அந்த டாஸ்கே விட்டுக் கொடுத்தது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்த நிலையில் பிக் பாஸ் தண்டனை கொடுக்கும் விதமாக கேப்டன் டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் நாமினேசன் ப்ரீ பாஸ் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.
இதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அதிர்ச்சியாக நிலையில் முத்துக்குமார் அவர் செய்த தவறை உணர்ந்து கொண்டு பிக் பாஸ் குருநாதனிடம் மன்னிப்பு கேட்டு வேதனைப்பட்டு வருகிறார். தற்போது முத்துக்குமாரின் இந்த செயலுக்கு மக்கள் வெளியில் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ந்து முத்துக்குமார் சில விஷயங்களில் சொதப்பிக்கொண்டு வருவதால் இவரை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு ராணவ் முதல் இடத்திற்கு வந்து வெற்றி கோப்பை கைப்பற்றி விடுவார்.
இதற்கு இடையில் இந்த பிக் பாஸ் வீட்டில் யார் நன்றாகவும் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்பதை தெரிவிக்கும் வகையில் ஒருவரை தேர்வு செய்து அவர்களுக்கு கேக் ஊட்டும் விதமாக ஒரு விஷயத்தை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் பவித்ரா மற்றும் அன்சிதா, ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித், சௌந்தர்யா மற்றும் ரயான் என இவர்கள் அவர்களுக்குள்ளேயே மாறி மாறி கேக் ஊட்டி கொண்டார்கள்.
அடுத்ததாக முத்துக்குமரன் மஞ்சரிக்கு கேக் ஊட்டினார், முத்துக்குமரனுக்கு தீபக் கை கொடுத்தார், ஜாக்குலின் தீபக்கு கேக் கொடுத்தார், ராணவ் அருணுக்கு கொடுத்தார், விஷால் சௌந்தரவுக்கு கொடுத்தார், விஷாலுக்கு அருண் கொடுத்தார். இப்படி கேக் அனைவருக்கும் கிடைத்த நிலையில் இரண்டு போட்டியாளர்களுக்கு மட்டும் யாருமே கேக் கொடுக்காமல் ஒதுக்கி விட்டார்கள்.
அந்த வகையில் ஜாக்குலின் மற்றும் ராணவ்க்கு யாரும் கேக் கொடுக்கவில்லை. இருந்தாலும் இவர்களுக்கு வெளியே மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வருவதால் நிச்சயம் டாப் 3 இடத்திற்கு வந்து விடுவார்கள். அதிலும் ராணவ் டைட்டில் மற்றும் கோப்பையை பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.