Kavin: விஜய் டிவியில் இருந்து அடுத்தடுத்த பிரபலங்கள் பெரிய திரைக்கு வந்து கலக்கி கொண்டிருக்கின்றனர். அதில் தற்போது கவின் வளர்ந்து வரும் நடிகராக கவனம் பெற்றுள்ளார்.
அவருடைய லிஃப்ட், டாடா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஸ்டார் சுமாரான வெற்றியை பெற்றாலும் கவினுக்கான மார்க்கெட் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அதன்படி தற்போது அவர் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சதீஷ் இயக்கத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயின் ஆக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
சூட்டிங் ஸ்பாட்டில் குட்டி SK கொடுத்த டார்ச்சர்
அதன் படப்பிடிப்பில் கவின் ஓவர் அலப்பறை கொடுத்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. அதாவது விஜய் பயன்படுத்திய கேரவன் தனக்கு வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.
ஏன் இந்த பிடிவாதம் என்று விசாரித்ததில் விஜய் பயன்படுத்தும் கேரவன் பல வசதிகளுடன் அம்சமாக இருக்குமாம். அதனாலேயே கவின் தன்னை அடுத்த விஜய்யாக ஆழ்மனதில் நினைத்துக் கொண்டு இப்படி கேட்பதாக கிசுகிசுக்கின்றனர்.
ஆனால் அது கிடைக்காத பட்சத்தில் வேறு கேரவன் கொடுத்தால் வேண்டாம் என்கிறாராம். இதற்காக படப்பிடிப்பை கூட தள்ளி வைக்கலாம் என்று அவர் கூறியதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இவர்தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. அதை கவின் தொடர்ந்து மறுத்து வந்தார்.
ஆனால் நடப்பதெல்லாம் பார்த்தால் கவின் வேற ஐடியாவில் இருக்கிறார் போலிருக்கிறது. ஆக மொத்தம் குட்டி SK நான் தான் அடுத்த விஜய் என சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கிளம்பிவிட்டார்.