வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திருமணத்திற்கு தேதி குறித்த ஜோடி.. காதலியை கரம் பிடிக்க போகும் கௌதம் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் கௌதம் கார்த்திக். மணிரத்தினத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. தனது தந்தையைப் போல இவரும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தார்.

இந்நிலையில் தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் உடன் மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் திட்டவட்டமாக மஞ்சுவா மோகன் இதை மறுத்துவிட்டார். ஆகையால் இவர்கள் இருவரும் நட்பாக தான் பழகி வருகிறார்கள் என கூறப்பட்டது.

Also Read : நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

ஆனால் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நாங்கள் காதலிக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இவர்களது திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஊட்டி மற்றும் சென்னையில் வரவேற்பு நடக்க உள்ளது.

Also Read : நவரசநாயகன் இளசுகளை கவர்ந்த 5 காதல் படங்கள்.. பத்து நிமிஷத்துல பட்டையை கிளப்பிய கார்த்திக்

இதில் நண்பர்கள் மற்றும் திரை துறையை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகையால் கௌதம் கார்த்திக் தனது காதலியான மஞ்சுமா மோகனை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். திருமண வாழ்க்கையில் இணைய உள்ள இவருக்காக திரை துறையிலும் அடுத்தடுத்த படங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த ஆண்டு நிறைய திரை பிரபலங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன், ஆதி-நிதி அகர்வால் போன்ற நட்சத்திர பிரபலங்களைத் தொடர்ந்து இப்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : எப்படி இருந்த மஞ்சுமா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

Trending News