Pushpa 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா, ராஸ்மிகா மற்றும் பகத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் அனைத்து திரையரங்களிலும் சக்க போடு போட்டு வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 11 நாள் ஆகிய நிலையில் கிட்டதட்ட 1400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது.
இன்னொரு பக்கம் படம் வெளியான முதல் நாளிலே பல சர்ச்சைகளை அல்லு அர்ஜுனா சந்தித்து வருகிறார். இருந்தபோதிலும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடி புஷ்பா 3 பாகத்திற்கான வேலைகளையும் துவங்கி விட்டார்கள். அந்த வகையில் புஷ்பா 2 கிளைமாக்ஸில் யார் குண்டு வைத்தார்கள் என்ற விஷயம் மர்மமாக வைக்கப்பட்ட நிலையில் அதை காட்டும் விதமாக புஷ்பா 3 பாகத்தில் இன்னொரு முக்கியமான ஸ்டாரை கொண்டு வரப் போகிறார்கள்.
அவர் யார் என்றால் டோலிவுட்டின் ஹீரோ, இளசுகளின் மனதை கொள்ளை அடித்த விஜய் தேவரகொண்டா தான். இவர் ராஸ்மிகாவின் லவ்வராக இருந்தாலும் புஷ்பா 3 பாகத்தில் அல்லு அர்ஜுனாவுக்கு வில்லனாக வரப் போகிறார். அதற்காக மொத்த படக்குழுவும் விஜய் தேவரகொண்டா விடம் பேச்சுவார்த்தை வைத்திருக்கிறார்கள்.
அவருக்கும் இப்படத்தின் வெற்றியில் பங்கு கொள்ளும் விதமாகவும், ராஷ்மிகாவிற்காகவும் ஓகே சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா படம் மாபெரும் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து விட்டது. இதனை இன்னும் பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு புஷ்பா 3 பாகத்தில் அல்லு அர்ஜுனா, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவுடன் சம்பவத்தை செய்வதற்கு தயாராகி விட்டார்கள்.
ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான படங்களிலே அதிக வசூலை அடைந்தது புஷ்பா 2 தான். அது மட்டுமில்லாமல் பிரம்மாண்ட படங்களாக வெளிவந்த பாகுபலி மற்றும் கேஜிஎப் படங்களின் வசூலையும் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு வெற்றியை பெற்று விட்டது. இதனால் அடுத்த பாகத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறுவதற்கு மொத்த டீமும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.