வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

துணிவு ஷூட்டிங்கில் அஜித்தை காண திரண்ட கூட்டம்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் துணிவு. இந்தப் படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் துணிவு படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் முடிந்தது. தற்போது பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு அண்ணா சாலை எல்ஐசி கட்டிடத்தில் நடைபெற்றது. ஹைதராபாத்தில் எடுக்க தவறிய சில காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். மேலும் பொங்கல் ரிலீஸுக்காக துணிவு படத்தை தயார் செய்து வருகிறார்கள்.

Also Read :எல்லா மொழிகளியும் குறிவைக்கும் போனி கபூர்.. தீபாவளியை மறக்கடித்த அஜித்

இந்த சூழலில் துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு கூட்டம் கூடி உள்ளனர். மேலும் அங்குள்ள தீயணைப்பு வண்டியின் முன் முகமூடி அணிந்த இருவர் அமர்ந்திருந்தார்கள். இதில் ஒருவர் தலையில் நரைமுடியை இருப்பதை கவனித்த ரசிகர்கள் இது அஜித்தாக இருக்கும் என கணித்தனார்.

அதன் பின்பு தான் அஜித்தை போல் உருவம் கொண்டவர் ஒருவர் துணிவு படத்திற்காக டூப்பாக பயன்படுத்தி காட்சிகளை வினோத் எடுத்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அஜித்தை காண வந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.

Also Read :அஜித் எடுத்திருக்கும் முக்கிய முடிவு.. விக்னேஷ் சிவன் படத்திற்கு பிறகு தரமான சம்பவம்

மேலும் நேற்று அதிகாலை தான் அஜித் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்துள்ளார். இதை அறிந்து சென்னை விமான நிலையம் முன் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து அஜித் வருவதை ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இனி அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தைப் பற்றி அடுத்த அடுத்த அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. மேலும் இந்த பொங்கல் பண்டிகையை துணிவு படத்தின் மூலம் தெறிக்க விட அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read :அஜித், விஜய் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட மீனா.. பல வருடங்களுக்குப் பின் வருந்திய சம்பவம்

Trending News