திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை வம்புக்கு இழுத்து விஜய்யை அசிங்கப்படுத்திய கூட்டம்.. திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியா? எல்லாம் கர்மா bro

Rajini and Vijay: திரையுலகை பொருத்தவரை காலம் காலமாக இரு நடிகர்களுக்கு இடையே போட்டி நிலவிக் கொண்டு வருவது வழக்கம் தான். அப்படித்தான் விஜய் அஜித் இருவரும் எதிரும் புதிருமாக மோதி கொண்டார்கள். ஆனால் தற்போது எங்கு திரும்பினாலும் விஜய், ரஜினி பஞ்சாயத்து தான் தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி சூப்பர் ஸ்டார் விஜய் என்று போறபோக்குல சரத்குமார் ஒரு குண்டை தூக்கித் போட்டு போயிட்டாரு.

அதுதான் தற்போது பூகம்பமாக வெடித்து வருகிறது. ஏனென்றால் நேற்று வந்தவர் எல்லாம் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுவதெல்லாம் நியாயமே இல்லை என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொன்னதும் இவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆனந்தமாக ஆகிவிட்டது. அதனால் இந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் விஜய் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதற்கு ஏற்ற மாதிரி இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பல மாதங்களாக விஜய் மௌனம் காத்தது தான் இன்னும் ரஜினி ரசிகர்களுக்கு கடுப்பாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை அதிக அளவில் முத்தி போய்விட்டது. இதனால் ஒவ்வொருவரும் எப்பொழுது சான்ஸ் கிடைக்கும் அவர்களை வைத்து செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது இரண்டு பக்கத்திலும் இருந்து லட்டு மாதிரியான ஒரு விஷயம் அவர்களுக்கு தொக்காக கிடைத்து விட்டது.

Also read: அசிங்கப்பட்டதை காது காதுமாய் வச்சு மறைத்த விஜய்.. ஆனாலும் இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிட்டானுக!

அதனால் இதையே பிடித்துக் கொண்டு மாத்தி மாத்தி அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அதாவது ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என்று ஒரு ஹேஷ்டேக் மூலம் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மூலம் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதற்கு கோபப்பட்ட ரஜினி ரசிகர்கள் காம வெறி பிடித்த விஜய் என்று ஒரு ஹேஷ்டேக் பயன்படுத்தி விஜய் நடித்த படங்களில் உள்ள கிசுகிசு சம்பந்தமான புகைப்படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

உடனே விஜய் ரசிகர்கள் விஜயகாந்த்-க்கு இறுதி அஞ்சலி செலுத்த போனபோது செருப்பைக் கொண்டு இருந்த விஷயத்தை கையில் எடுத்து இந்த மாதிரி மட்டமான விஷயத்தை செய்த நபரை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதுவே ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த ஒரு விஷயமாக போய்விட்டது.

ஏனென்றால் அவர்கள் தற்போது #செருப்படிவாங்கிய_விஜய் என்று சொல்லி ரஜினி ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். ஆக மொத்தத்தில் ரஜினியை வம்புக்கு இழுக்கணும் என்று நினைத்த விஜய் ரசிகர்களுக்கு தற்போது விஜய் அசிங்கப்படுத்தும் அளவிற்கு திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியாக மாறிவிட்டது. இதை தான் சொல்வார்கள் திருப்பி அடிக்கும் கர்மா என்று.

Also read: ரஜினிகாந்த் அழைத்தும் 2 படங்களுக்கு நோ சொல்லி கெத்து காட்டிய 90ஸ் ஃபேவரிட்.. இப்ப புலம்பி என்னத்துக்கு

Trending News