புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து சூர்யாவின் வீடியோ.. நீண்ட முடி, தாடியுடன் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டதால், பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று சூர்யாவிற்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்பு ஒரு மாதம் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சூர்யா, தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்த பின் முதல் முதலாக தன்னுடைய மனைவியுடன் பாலவாக்கத்தில் உள்ள பள்ளி திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சூர்யா கொஞ்சம் உடல் மெலிந்து, நீண்ட முடி மற்றும் தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.

suriya-new-look-1
suriya-new-look-1

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. அதைத்தொடர்ந்து சூர்யா ‘நவரசா’ எனும் வெப் சீரியலிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆகையால் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டெழுந்த சூர்யா, இதன்பின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து விடுவாராம்.

எனவே சூர்யாவின் தற்போதைய லுக் எப்படி இருக்கிறது? என்பதைப் பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் இந்த வீடியோவை ஆர்வத்துடன் பார்க்க தொடங்கியுள்ளனர்.

Trending News