தமிழ் சினிமாவில் கமலஹாசன்-மீனா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் கமலஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருந்தது பட்டி தொட்டி எங்கும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார் பேபி அன்ரா தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
அவருடைய தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அன்ரா பேரழகியாக, ஒரு ஹாலிவுட் ஹீரோயின் போலவே காட்சியளிக்கிறார்.
மேலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த அன்ரா, தனது 8-வது வயதில் அவ்வை சண்முகி நடித்த பிறகு, ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து, அதன்பின் விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
ஆனால் இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு அவருடைய அம்மா மறுத்துவிட்டதால் மாடலிங், டான்ஸ், எழுத்தாளர் என தனது ஈடுபாட்டை மாற்றிக் கொண்டார்.
அதன்பின் தற்போது ஒரு பேஷன் நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் மீடியாவில் பிரபலமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.