வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஜனனி ஈஸ்வரியை டைவர்ட் பண்ண சக்திக்கு கொடுத்த டார்ச்சர்.. மறைமுகமாக இருந்து ஆடு புலி ஆட்டத்தை ஆடும் கருப்பு ஆடு

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எல்லாமே மாயமாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் யாரு தான் இந்த மாதிரி பண்ணுகிறார் என்று தற்போது வரை ஒரு புரியாத புதிராகவும் கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் கதிரை அடித்ததும்,  தர்ஷினியை கடத்திட்டு போனது யார் என்று தெரியவில்லை.

இவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சக்தி ரொம்பவே மெனக்கீடு செய்து குணசேகரன் வீட்டில் உள்ள நான்கு மருமகளுக்கும் உதவியாக இருக்கிறார். அதனால் அதை கெடுக்கும் விதமாக சக்திக்கும் தற்போது பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட தர்ஷனியை யார் கடத்திட்டு போனாங்க என்பதை கார் நம்பரை வைத்து கண்டுபிடித்து அந்த வீட்டில் பேய் விசாரிக்க போய் விட்டார்கள்.

போன இடத்தில் கிடைத்த விஷயங்கள் வைத்து மறுபடியும் தேடப் போகும்போது சக்திக்கு திடீரென்று ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை பார்க்கும் பொழுது தானாக நடந்தது மாதிரி தெரியலை ஏதோ திட்டமிட்டு அவரை தாக்கியது போல் இருக்கிறது. தற்போது சக்தியை அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கூட்டு போகிறார்கள். அந்த வகையில் இவர்கள் அனைவரையும் டைவர்ட் பண்ணுவதற்காக தான் அந்த கருப்பு ஆடு இந்த விஷயத்தை பண்ணிருக்கிறது.

Also read: சக்தி போல் மனைவிக்கு தோள் கொடுக்கப் போகும் கதிர்.. கடைசியில் ஒன்னும் இல்லாமல் நிற்கும் குணசேகரன்

அப்படி என்றால் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டு அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி வருகிறார். ஆனால் அவர் யார் என்று மட்டும் தெரியவில்லை. தற்போது வரை ஒரு யூகத்தின் அடிப்படையில் மெய்யப்பன் குடும்பத்தில் உள்ளவர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதற்கு இடையில் தர்ஷினி தப்பித்துப் போனதால் அவரையும் அங்கே அடித்து துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்க்கும் பொழுது குணசேகரன் ஆகவும் இருக்க வாய்ப்பில்லை, ஜான்சி ராணியாகவும் இருக்க வாய்ப்பில்லை. அத்துடன் வளவன் கடத்திட்டு போயிருந்தால் கூட இந்நேரத்துக்கு போன் பண்ணி பணத்தை கேட்டு பிளாக்மெயில் பண்ணி இருப்பார்.

அதனால் இவர்கள் யாரும் இல்லை, கண்டிப்பாக ஜனனியை பழி வாங்குவதற்காக குடும்பத்தில் இருப்பவர்களை டார்கெட் பண்ணி டார்ச்சர் கொடுத்து வருகிறார் ராமசாமி. ஏற்கனவே இவர் சொன்னது என்னவென்றால் ஜனனி குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அழிக்க வேண்டும் என்றுதான். அதனால் தான் ஒவ்வொருவருக்கும் இந்த மாதிரி டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

Also read: சக்தியின் நடிப்பை தூக்கலாக காட்டி குணசேகரனை டம்மியாக்கிய எதிர்நீச்சல்.. டிஆர்பிக்காக எடுத்த முயற்சி

Trending News