செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: குணசேகரன் போட்ட நிபந்தனை, வீட்டிலேயே முடங்கும் மருமகள்கள்.. ஒரே குடும்பத்திற்குள் ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் தோற்றுப் போய் மருமகள்கள் முதன்முதலாக ஜெயித்து விட்டார்கள். அந்த சந்தோஷத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் குணசேகரன் வீட்டில் இருந்தால் சரிவராது என்று ஒவ்வொருவரும் வீட்டை விட்டு கிளம்ப ரெடி ஆகி விட்டார்கள்.

இந்த நிலையில் ஜாமினில் இருந்து வெளிவந்த சக்தி, கதிர் மற்றும் ஞானம் வெளியே போய் எப்படி சமாளிப்பது. இங்கே இருக்கலாம் நமக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்கிறார்கள். ஆனாலும் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். இந்த வீட்டை விட்டு போனால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று குணசேகரன் வீட்டு மருமகள் சொல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து குணசேகரன் தோற்றுப் போனதால் சாமியார் மாதிரி காவியுடை அணிந்து வீட்டிற்கு திரும்புகிறார். அதாவது புலி பதுங்குவது பாயதுக்கு தான் என்று சொல்வது போல் பண்ணின தவறுகளை ஒவ்வொன்றாக சொல்கிறார். அதே நேரத்தில் மருமகளிடம் சவால் விடும் அளவிற்கு நீங்கள் ஜெயித்துக் காட்டினால் நான் என்னுடைய ஆணாதிக்கத்தை விட்டு விடுகிறேன் என்று சபதம் போடுகிறார்.

கமுக்கமாக காய் நகர்த்திய குணசேகரன்

அத்துடன் குணசேகரன் ஒரு கண்டிஷனும் போடுகிறார். அதாவது இந்த வீட்டில் இருந்தே நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும். அப்படி என் கண் முன்னாடி நீங்கள் வெற்றி பெற்று ஜெயித்துக் காட்டினீர்கள் என்றால் நான் உங்களிடம் சரண் அடைந்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

அதாவது எந்த அளவிற்கு பெண்களின் கௌரவத்தை சீண்டிப் பார்க்க முடியுமோ, அந்த அளவிற்கு குணசேகரன் பேசி நான்கு மருமகள்களையும் ஒரே வீட்டில் இருக்க வைத்து விடுகிறார். அதன்படி அவர்களும் நாங்கள் இங்கே இருந்தே உங்கள் கண்ணு முன்னாடி கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்து சுதந்திர பறவைகளாக வாழ்ந்து காட்டுகிறோம் என்று சவால் விடுகிறார்கள்.

குணசேகரன் இந்த மாதிரி ஒரு பிளான் போட்டதற்கான காரணம் அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் ஏது செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவும், இனி மருமகள்களின் ஒற்றுமையை பிரிப்பதற்கும் சதி பண்ணி விட்டார். சும்மாவே கொஞ்சம் காசு பணம் வந்ததும் ஞானத்தை வைத்து ரேணுகா மற்றும் நந்தினிக்கு சண்டை வந்தது.

அந்த வகையில் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் பொழுது ஒற்றுமையாக இருக்கும் மருமகள்களிடம் சண்டை சச்சரவு போட்டி பொறாமை இருக்கும் அளவிற்கு கதை நகரப் போகிறது. அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் சொந்த காலில் ஜெயித்த பின் தனித்தனியாக குடும்பம் குட்டி என்று பிரிந்து வாழப் போகிறார்கள்.

அதாவது குணசேகரன் நினைக்கிறது என்னவென்றால் இனி இவர்களை அடக்குவது முடியாத காரணம். அதனால் அவர்களுடைய ஒற்றுமையை குறைத்து நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதற்காக கூடவே இருந்து ஒவ்வொருவரையும் குழி பறிக்க போகிறார்.

இதற்கிடையில் தர்ஷினியின் கனவை நிறைவேற்றும் விதமாக அப்பா ஸ்தானத்தில் இருந்து ஜீவானந்தம் அனைத்து வேலைகளையும் பார்க்கப் போகிறார். ஆனால் பெத்த பிள்ளை என்ன நிலைமையில் எப்படி இருக்கிறார் என்பதை மறந்து ஜீவானந்தம் ஈஸ்வரியின் மக்களுக்காக ஓடிக்கொண்டு வருகிறார்.

அதே மாதிரி ஈஸ்வரிக்கு ஒரு நல்ல தோழராக இருந்து கடைசி வரை சப்போர்ட் பண்ண போவது ஜீவானந்தம் தான். இதற்கிடையில் ஞானம் மாமியார் பணத்தை வைத்து துவங்கிய வியாபாரத்தில் பெருத்த அடி விழப்போகிறது.

Trending News