புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பக்கா ப்ளான் போட்டு கவுத்த மருமகள்.. பலிகிடாவான மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்த பிரச்சினை வருவதால் வீட்டை மாற்ற வேண்டும் என அம்மா கனவில் வந்து சொன்னதைத் தொடர்ந்து மூர்த்தி தங்களுடைய பூர்வீக வீட்டை விற்க முடிவெடுக்கிறார். அப்போது மீனாவின் அப்பா ஜனார்த்தனன் அந்த வீட்டை வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

ஆனால் சொந்த பந்தத்திற்குள் வீட்டை விற்க விரும்பாத மூர்த்தியை மீனா பேசிப் பேசியே கவுத்து விடுகிறார். அதன் பிறகு மூர்த்தியும் ஜனார்த்தனனுக்கே வீட்டை கொடுக்க முடிவெடுக்கிறார். ஆனால் இந்த முடிவில் முல்லையின் அம்மாவிற்கு துளிகூட விருப்பம் இல்லை.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு சிக்கல்

மூர்த்தி மீனாவின் பேச்சைக் கேட்டு ஜீவாவிற்கு இந்த வீட்டை எழுதிக் கொடுக்க போகிறார் என்று முல்லையின் அம்மா நினைக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் சென்று கண்டபடி கத்தியும் இருக்கிறார்.

அப்போது முல்லையின் அம்மாவை கண்டித்த கதிர், வீட்டை விற்ற பணத்தை வைத்து இடம் வாங்கி அதில் புதிதாக நான்கு அண்ணன் தம்பிகளின் பெயரில் வீடு கட்ட தான் போகிறார்கள். ஆகையால் அவர்களை பற்றி குறை கூறி தேவையில்லாத பிரச்சினை உண்டு பண்ணாதீர்கள் என்று திட்டுகிறார்.

Also Read: புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

அதன்பிறகு இன்று மீனாவின் அப்பாவிற்கு வீட்டை எழுதி கொடுப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்கின்றனர். கதிரும் அங்கு கையெழுத்து போட்டுக் கொடுக்க கிளம்புகிறார். இதைப் பார்த்ததும் முல்லையின் அம்மா பொங்கி எழுகிறார்

அண்ணன் கூப்பிட்டதும் உடனே கையெழுத்துப் போட்டுக் கொடுக்க கிளம்புகிறீர்கள். அதில் உங்களது பங்கை கையோடு வாங்கிட்டு வாருங்கள் என்றும் கதிரிடம் முல்லையின் அம்மா ஆத்திரத்துடன் பேசுகிறார். என்னதான் அவர் பேசுவது சரி என்றாலும், அது பேசும் சமயம் இது அல்ல. எது எப்படியோ மீனா பிளான் தான் சக்ஸஸ் ஆனதால், பலிகடாவாக மாறிய குடும்பத்தில் அவர் மட்டும் தான் தற்போது குஷியாகி இருக்கிறார்.

Also Read: விஜய் டிவியை தூக்கி எறிந்த சீரியல் நடிகை.. ஜீ தமிழும் கைவிட்ட பரிதாபம்

Trending News