வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த பாக்கியா.. வீட்டை விட்டு வெளியேறும் மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான். என்பதற்கு ஏற்ப கோபியை மாதிரி கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிய செழியன். அதாவது ஜெனிக்கு தெரியாமல் மாலினிடம் பழகின விஷயம் தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

அதாவது சும்மா இருந்த மாலினியை தூண்டிவிடும் விதமாக பாக்கியா வாயைக் கொடுத்து பிரச்சினையை இழுத்து விட்டார். இனிமேல் என்னுடைய மகனை நீ பார்க்க கூடாது, அவனும் உன் பக்கம் வரமாட்டான் என்று மாலினியை மிரட்டினார் பாக்கியா. உடனே சைக்கோ மாலினி என்ன செய்வதென்று தெரியாமல் நேரடியாக பாக்யா வீட்டிற்கு போய்விட்டார்.

அங்கே அனைவரும் முன்னணியிலும் செழியனுக்கும் எனக்கும் ரிலேஷன்ஷிப் இருக்கிறது என்று சொல்லி அனைத்து வீடியோக்களையும், போட்டோக்களையும் ஜெனியிடம் காட்டி விடுகிறார். அத்தோடு மட்டுமில்லாமல் போற போக்குல பாக்கியாவையும் கோர்த்து விடுகிறார். அதாவது எங்களுக்குள் இருக்கின்ற உறவுமுறை அனைத்தும் பாக்யாவிற்கும் தெரியும் என்று சொல்கிறார்.

Also read: செழியனின் கன்னத்தை பழுக்க வைத்த பாக்யா.. அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு!

இதனால் ஜெனி. செழியன் பண்ணிய தப்பை விட அத்தை நம்மிடம் இந்த உண்மைகளை மறைத்து விட்டார் என்ற கோபத்தில் பாக்யாவை நீங்கள் எப்போதும் உங்க பையனுக்கே சப்போர்ட் பண்ணுங்க என சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார். இனி என்ன நடக்கப்போகிறது என்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பாக்கியாவை தான் குறை சொல்ல போகிறார்கள்.

அதாவது பாக்கியா இதை ஆரம்பத்தில் சொல்லி இருந்தால் இவ்வளவு தூரத்துக்கு பிரச்சினை வந்திருக்கிறது. எல்லாத்தையும் நானே சமாளிக்கிறேன் என்று பிரச்சனையை பெருசாகியது தான் மிச்சம் என்று கோபி சொல்லப் போகிறார். உடனே கோபி அம்மாவும் பாக்யாவை தான் திட்டப் போகிறார். ஆக மொத்தத்தில் தப்பு பண்ணியவரை விட பாக்யா மீது தான் எல்லா பழியையும் விழுகிறது.

ஏற்கனவே கோபி ராதிகா ரொம்பவே ஓவராக ஆடுவார்கள். இப்பொழுது அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா இருக்க போறாங்க. இதை வச்சு பாக்யாவை அந்த குடும்பத்தில் இருந்து பிரிப்பதற்கு வஞ்சகமாக பேசப் போகிறார். இதையெல்லாம் தாண்டி பாக்யா எப்படி மகன்களின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்கு போராடப் போகிறார் என்பதுதான் மீதமுள்ள கதையாகும்.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் கோபி.. சைடு கேப்பில் பாக்கியாவின் மகளுக்கு பாயாசத்தை போடும் சக்களத்தி

Trending News