வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முதல்முறையாக திருநங்கையை களமிறக்கும் பிக்பாஸ் 5.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்பதும், உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் நாம் அறிந்ததே.

அதே போல் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்டு, அந்த வருட இறுதியில் முடிக்கப்படும். ஆனால் கடந்த நான்காவது சீசன் மட்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுற்றது.

தற்போது பிக் பாஸ் தமிழில் 5வது சீசன் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கவிருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இந்த சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

shakeela-daughter
shakeela-daughter

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை சகிலாவின் மகளான மிலா கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது நடிகை சகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 என்ற  நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கவர்ச்சி புயலாக வலம் வந்த ஷகிலா இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மம்மி என்ற உயர்ந்த ஸ்தானம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியையே சேரும்.

சமீபத்தில் ஷகிலா, மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து  வருவதாகவும், அவர் ஓர் ஆடை வடிவமைப்பாளர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது மிலா பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News