வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புருஷன் கல்யாணத்துக்கே அழைத்த மகள்.. ராதிகாவின் திருமணத்தை நிறுத்த போட்ட பிளான்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து ஆன கையோடு ராதிகாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ கிளம்பிய கோபி, தலைக்கு மேல் வளர்ந்து நிற்கும் பிள்ளைகளை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

‘இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் யாருக்கும் சந்தோஷம் இருக்காது. அந்த தவறை மட்டும் செய்து விடாதே’ என கோபியின் அம்மா, அப்பா இருவரும் அவரிடம் கெஞ்சுகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என பார்த்து விடலாம் என்றும் கோபியிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்.

Also Read: கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

இதைப்பற்றி யோசித்துக் கொண்டே வரும் போது கோபியின் தந்தை, தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டால், ஒருவேளை இந்த கல்யாணம் நின்றுவிடும் என்ற அளவுக்கு விரத்தி அடைகிறார். பாக்யாவிற்கு கோபி-ராதிகாவின் திருமணம் பற்றிய செய்தி ராதிகாவின் மகள் மூலம் தெரியவருகிறது.

ராதிகாவின் திருமணத்திற்கான சமையல் ஆர்டர் பாக்யாவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த ஆர்டரை நல்லபடியாக செய்து கொடுத்தால் இன்னும் பெரிய பெரிய கல்யாண ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால், இந்த சமையர் ஆர்டரை சரியாக முடித்து கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார்.

Also Read: ராதிகாவை அடைய வெறிபிடித்து திரியும் கோபி.. இனிமே தான் பயங்கரமா இருக்கப்போகுது

ஆனால் கட்டுன புருஷனோட கல்யாணத்திற்கு சமைத்துக் கொடுக்கும் துர்பாக்கியசாலியாக இருக்கும் பாக்யா, அதை நினைத்து கலங்குகிறார். தன்னுடன் 25 வருடங்களாக பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்த கோபி, இன்னொரு திருமணம் செய்து கொள்வதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.

அவரது தலைமையில் கோபி-ராதிகா திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார். இதெல்லாம் தெரிந்துதான் பாக்யா கோபியிடம் விவாகரத்து பெற்றார். இருப்பினும் இதனை கோபியின் அப்பா, அம்மா மற்றும் பிள்ளைகளால் தான் தாங்க முடியவில்லை.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

இப்படி மனைவியே, கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து மோசமான முன்னுதாரணத்தை இந்த சீரியல் காண்பித்துக் கொண்டிருக்கிறது என்று பாக்கியலட்சுமி சீரியலை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கிழித்துத் தொங்க விடுகின்றனர்.

Trending News