ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குணசேகரன் முன் மறுபடியும் அவமானப்பட்டு நிற்கும் மருமகள்கள்.. உதவாக்கரை தம்பிகளால் அட்டூழியம் பண்ணும் சர்வாதிகாரி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், கதிர் மற்றும் நந்தினி எப்படியும் மொய் விருந்து நிகழ்ச்சியில் அவமானப்பட்டு நிற்பார்கள். அதை கண்குளிர நின்னு வேடிக்கை பார்க்கலாம் என்று குணசேகரன் நினைத்தார். ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை யாரையும் அவமானப்பட விடமாட்டோம் என்று குடும்பத்தில் இருப்பார்கள் நந்தினி மற்றும் கதிரை கௌரவப்படுத்திவிட்டார்கள்.

அதாவது ஈஸ்வரி அவர் போட்டிருந்த நகைகளை கொடுத்து தர்ஷினி ரேணுகா இவர்களும் நகை பணங்களை மொய் விருந்தாக கொடுத்து விட்டார்கள். இதனால் அசிங்கப்பட்டு அந்த இடத்தில் நிற்க முடியாமல் குணசேகரன் கிளம்பிவிட்டார். இதில் ஞானம் அவர்கிட்ட பணம் இல்லை என்றாலும் யாரோ தெரிஞ்ச நண்பர்களிடம் கடன் வாங்கி கட்டுக்கட்டாக பணத்தை தானமாக கொடுத்தார்.

பணத்தை திருப்பிக் கொடுத்த நந்தினி

இவர்களுடைய அன்பை எல்லாம் புரிந்து கொண்ட கதிர் செய்த தவறுகளையும் கோபத்தையும் புரிந்து கொண்டு நந்தினி மற்றும் மாமனாரிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு அனைவரும் ஒற்றுமையாக இருந்த நிலையில் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அடுத்து தாராவை பார்த்த அப்பத்தாவிற்கு புதுசாக பாசம் வந்துவிட்டது. ஆசீர்வாதம் பண்ணி கையில் பணம் கொடுக்க போய்விட்டார்.

இதை பார்த்த நந்தினி உங்கள் ஆசிர்வாதம் மட்டும் போதும் உங்களுடைய பணம் தேவையில்லை. நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சை மாத்திக்கொண்டு நீங்கெல்லாம் யாரோ மாதிரி என்று பேசினீர்கள். இப்ப மட்டும் என்ன பேத்தி என்று பாசமா கொஞ்சுறீங்க என்று வாய்க்கு வந்தபடி விசாலாட்சியை திட்டி விட்டார். ஆனாலும் தாராவை ஆனந்த கண்ணீருடன் விசாலாட்சி அரவணைத்துக் கொண்டார்.

இந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த குணசேகரன் விசாலாட்சி இடம் என்ன திடீரென்று கட்சி மாறுகிறாயா என்று கேட்கிறார். என்னை கோவிலில் வைத்து ஊர்காரங்கள் முன்னாடி அசிங்கப்படுத்திய அவர்களிடம் உனக்கு என்ன சகவாசம் என்று கேட்கிறார். உடனே நந்தினி நீங்கதான் அங்கே வந்து எங்களை அசிங்கப்படுத்தி பிச்சைக்காரர்கள் போல அவமானப்படுத்தி விட்டீர்கள்.

உங்களால் நிம்மதியாக இருக்க முடியல ஏதாவது பண்ணி முன்னுக்கு வரலாம் நினைத்தாலும் அதற்கும் வழி விட மாட்டீங்க என்று குணசேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து இருக்கிற பணத்தை வைத்து நந்தினி அவருடைய சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து அதை விற்பனை பண்ணலாம் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் இரவு முழுவதும் பேசி முடிவு பண்ணி விட்டார்கள்.

ஆனால் விடியற்காலையில் இவர்களுக்கு என்று எங்கிருந்து தான் பிரச்சினை வருமோ தெரியவில்லை. புதுசாக ஒரு பூகம்பம் கிளம்பிவிட்டது. அதாவது தன்னிடம் வக்கு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது தானம் பண்ண வேண்டும் என்று நினைத்த ஞான சூனியத்தால் ஒரு புது பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. யாரிடமும் கடன் வாங்கி மொய் விருந்தில் கெத்து காட்டிய ஞானத்தை தேடி குணசேகரன் இருக்கும் பொழுது கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு வந்து விட்டார்கள்.

இரண்டு நாளில் பணம் தந்து விடுவேன் என்று அவசரமாக கேட்டதால் நானும் எதுவும் சொல்லாமல் கொடுத்துவிட்டேன். ஆனால் நீ வாங்குனதுக்கு அப்புறம் எதுவுமே சொல்லாம உனக்கு என்ன என்று இருக்கிறாய். நான் கொடுத்த பணத்தை கொடு என்று அவமானப் படும் அளவிற்கு அந்த நபர் பணத்தைக் கேட்டு பிரச்சினை பண்ணுகிறார்.

இதையெல்லாம் பார்த்த குணசேகரன் மனதில் குளு குளு என்று சந்தோஷம் நிரம்பி வழிகிறது. ஆனால் இவர் வருவதற்கும் ஒரு வகையில் குணசேகரன் தான் காரணமாக இருப்பாரோ என்னமோ. பிறகு அந்த நபர் சண்டை போடுவதைப் பார்த்து அசிங்கப்பட்ட நந்தினி அவரிடம் இருந்த பணத்தை கொடுத்து அந்த நபரை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்.

பாவம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களாலையும் ஒன்னும் பண்ண முடியவில்லை. பொண்டாட்டி பேச்சைக் கேட்டு எப்படியாவது முன்னுக்கு வந்து விட வேண்டும் என்று குணசேகரனை எதிர்த்த உதவாக்கரை தம்பிகளாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆக மொத்தத்தில் இந்த குணசேகரன் சர்வாதிகாரம் பண்ணும் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கும் வரை இவர்களுக்கு விடிவு காலமே பிறப்பது சந்தேகம்தான்.

தொடர்ந்து ஜெயித்துவரும் குணசேகரன்

Trending News