சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சன் பிக்சர்ஸ் இடம் லோகேஷ் பேசிய டீல்.. தலைவர் 171 ஆல் ஆட்டம் கழண்டு போய் நிற்கும் மாறன்

Lokesh In Thalaivar 171: அனைத்து முன்னணி தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தேடும் இயக்குனர்களின் லிஸ்டில் மிகப் பேவரிட் ஆக இருப்பது லோகேஷ். அதற்கு காரணம் இவர் எடுத்த படங்கள் அனைத்தும் வசூல் அளவில் லாபத்தை கொடுத்து ஹீரோக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வாங்கி கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் சிறந்த இயக்குனராக வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகராகவும் என்னால் பயணிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் இனிமேல் என்ற ஆல்பம் மூலம் சுருதிஹாசனுடன் நெருங்கி காதல் மற்றும் ரொமான்டிக்கை தெறிக்க விட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார். இதுதான் ரஜினியின் நீண்ட நாள் ஆசை என்றே சொல்லலாம். அதாவது கமலை வைத்து எப்போது லோகேஷ் விக்ரம் படத்தை வெற்றியாக கொடுத்தாரோ, அப்போதே ரஜினி மனதில் இடம் பிடித்து விட்டார்.

அந்த வகையில் ரஜினி, லோகேஷை பார்த்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறார். அதை நிறைவேற்றும் விதமாக தலைவர் 171 படம் உருவாக போகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

மாறனுக்கு செக் வைத்த லோகேஷ்

ரஜினிகாந்த் படம் என்றாலே சன் பிக்சர்ஸ் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிவிடும். இதில் லோகேஷ் இணைந்து இருக்கிறார் என்றால் டபுள் சந்தோஷத்தில் இருந்தார். ஆனால் அதற்கு ஒரு ஆப்பு வைக்கும் விதமாக லோகேஷ் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதாவது இப்படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளம் 250 கோடி என்று அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் லோகேஷ், இப்படத்தில் பணிபுரியை இருக்கும் கேமராமேன், எடிட்டர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் போன்ற ஆர்டிஸ்ட்கெல்லாம் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி கேட்டிருக்கிறார்.

அந்த வகையில் கேமரா மேன் மனோஜ் பிரம்மஹம்ஸாக்கு 3 கோடி சம்பளம், எடிட்டர் பிலோமின் ராஜ் 70 லட்சம் மற்றும் ஸ்டண்ட் அன்பறிவு மாஸ்டருக்கு 2 கோடி என்று டீல் பேசியிருக்கிறார்.

பொதுவாக எந்த இயக்குனர்களாக இருந்தாலும் தயாரிப்பாளரிடம் தனக்கான சம்பளத்தை கேட்டு வாங்குவது வழக்கம். ஆனால் லோகேஷ் தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் சம்பளம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதால் தயாரிப்பாளரிடம் கட்டன் ரைட்டாக பேசியிருக்கிறார்.

இவர் கேட்ட சம்பளத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமான கலாநிதி மாறன் அப்படியே ஆட்டம் கழண்டு போய் நிற்கிறார். ஆனாலும் இவருக்கு வேறு வழியிலே லோகேஷ் கேட்ட டீலுக்கு ஓகே சொல்லிவிட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

Trending News