சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விஜயகாந்த் வீட்டில் குவிந்த தொண்டர்கள்.. 20 நாளுக்குப் பின் எப்படி இருக்கிறார் தெரியுமா?

Vijayakanth : தமிழ் சினிமாவின் சொத்தாக பார்க்கப்படும் கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். அவருடைய நிலைமையை பார்த்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் இப்போது கேப்டன் நலமாக இருக்கிறார் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு தான் ரசிகர்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். ஆனாலும் பல நாட்களாக விஜயகாந்த் மருத்துவமனையில் இருப்பது அச்சத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

Also Read : எம்ஜிஆரை ஓவர் டேக் செய்த தயாரிப்பாளர்கள்.. அடிபணிய வைத்த விஜயகாந்த்

ஆனால் இப்போது ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. படிப்படியாக விஜயகாந்த் இப்போது குணம் பெற்று வந்து கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நேற்றைய தினம் விஜயகாந்த் நலமாக இருப்பதால் மியாட் மருத்துவமனை அவரை டிஸ்டார்ஜ் செய்துள்ளது. இதனால் அவரது வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து இருக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் பிரபலங்களும் வந்து அவரை பார்த்து செல்வதால் விஜயகாந்தின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செய்தி விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை இப்போது ஓரளவு நிம்மதி அடைய செய்திருக்கிறது.

Also Read : வளர்த்த கடா உயர்வது பொறுக்காத விஜயகாந்த்.. இன்றுவரை கேப்டன் மேல் உள்ள ஒரே கரும்புள்ளி

Trending News