வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரஜினியை அடிக்கடி சொல்லும்படி சரத்பாபு கேட்ட டயலாக்.. சூப்பர் ஸ்டார் மாஸ் காட்டிய கேரக்டர் ஆச்சே

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகளிலும் முன்னணி நடிகராகவும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமானவர்தான் நடிகர் சரத்பாபு. இவர் உடல்நல குறைவால் இரு தினங்களுக்கு முன்பு காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களை மட்டுமல்ல திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

‘இருக்கும்போது அருமை தெரியாது’ என்பது போல் இவர் மறைந்த பிறகு தான் இவரைக் குறித்த ஆச்சரியப்படக்கூடிய பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் சரத்பாபுவின் பேச்சு தான். அதிலும் ரஜினி சரத்பாபுவிற்கு இடையே இருந்த நெருக்கத்தைப் பற்றிய சுவாரசியமான சம்பவம் தெரிய வந்துள்ளது.

Also Read: எப்பொழுதுமே ரஜினி சிபாரிசு செய்யும் அந்த 3 நடிகர்கள்.. இவர்கள் பெயரை சொன்னாலே இனம் புரியாத நட்பு

இன்று வரை எவர் கிரீன் வசனமாக இருப்பது சூப்பர் ஸ்டாரின் ‘கெட்ட பைய சார் இந்த காளி’. இந்த வசனம் வருவது முள்ளும் மலரும் படம். 1978 ஆம் ஆண்டு மகேந்திரன் திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கிய இந்தப் படத்தில் ரஜினி, ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் காளி என்ற கதாபாத்திரத்தில் செம மாஸ் ஆக நடித்திருப்பார்.

இருப்பினும் இந்த படத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகவும் கலரான பாலிவுட் ஹீரோ போல் இருக்கக்கூடிய சரத்பாபு உடன் நடிப்பதற்கு ரஜினிக்கு கொஞ்சம் தயக்கம் ஏற்படுகிறது. இதனை கிண்டலாகவே அந்த படத்தின் இயக்குனரிடம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினி மகேந்திரனிடம் போய், படத்தில் சரத்பாபு என்னைவிட அழகாக கலராக இருக்கிறார்.

Also Read: இறுதிவரை ஜென்டில்மேன் ஆக வாழ்ந்த மனுஷன்.. சரத்பாபுவின் உடலை பார்த்து கதறிய மனைவிகள்

இந்த படத்தில் நான் கதாநாயகனாக நடிப்பது செட் ஆகுமா! நீங்கள் வேண்டுமென்றே தான் இப்படி செய்து விட்டீர்கள் என்று அடிக்கடி கிண்டல் அடிப்பாராம். ஆனால் இந்த படத்திற்கு பிறகு தான் சரத்பாபு மற்றும் ரஜினிகாந்த் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் ஏற்பட்டிருக்கிறது. ரஜினியின் வளர்ச்சியிலும் அவருடைய உடல் நலத்திலும் மிகவும் அக்கறை கொண்டவராக சரத்பாபு இருப்பாராம்.

முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற எவர் கிரீன் டயலாக் ஆன ‘கெட்ட பைய சார் இந்த காளி’ என்ற வசனத்தை சரத்பாபு அடிக்கடி ரஜினியிடம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டே இருப்பாராம். இப்போது அவர் மறைவுக்குப் பிறகு அந்த டயலாக்கை இனிமேல் ஆசையாக யார் கேட்பார்? என்று ரஜினி தன்னுடைய நண்பரின் இழப்பை தாங்க முடியாத துயரத்தில் இருக்கிறார்.

Also Read: யாரும் அறியாத சரத்பாபுவின் மறுபக்கம்.. இரண்டு மனைவிகள் இருந்தும் கிசுகிசுக்கப்படாத ஒரே நடிகர்

Trending News