வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யானை வாய்க்கு சோளப்பொரி கொடுத்த ஒடிடி.. முன்னணி நடிகரின் படத்தால் புஸ்வானமாகிப்போன கமல்

The digital rights of Amaran produced by Kamal have gone for less: “போர்  கண்டசிங்கம், வலி கொண்ட நெஞ்சம், இருந்தாலும் உனக்காக  போராடுவேன்” என்று விக்ரம் மூலம் கம்பேக் கொடுத்து தமிழ் சினிமாவை முன்னேற்ற பல வழிகளிலும் பாடுபட்டு வருகிறார் உலக நாயகன் கமலஹாசன். இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் திறமையை வெளிக் கொணரும் பொருட்டு பல தரமான படைப்புகளை தயாரித்து வருகிறார். 

சிவகார்த்திகேயனின் SK 21 மற்றும் சிம்புவின் STR 48  படத்தினை தயாரிக்கும் கமல், இதற்காக பெருமளவு முதலீடு செய்து உள்ளார்.  சிவகார்த்திகேயனாது பரவாயில்லை, சிம்பு என்று கூறியதும் கமலஹாசனின் ரத்த சொந்தங்கள் பலரும் ஏன் இந்த விபரீத முடிவு என்று பலவகையிலும் அட்வைஸ் செய்ய ஆரம்பித்தனர். 

SK 21 ல் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ராணுவ வீரரின் கதையை  கையில் எடுத்தார் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் இத்திரைப்படம் 100 கோடி பட்ஜெட் என முடிவு செய்யப்பட்டு, சிவகார்த்திகேயனின் சம்பளம் மட்டும் 20 கோடி கொடுக்கப்பட்டது. 

Also read: வாலைச்சுருட்டி கொண்டு கப்சிப் ஆன சிவகார்த்திகேயன்.. இதுவரை வாங்குன அடி போதும்டா சாமி

படப்பிடிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட விதம் ஆகியவை பட்ஜெட்டை தாறுமாறாக எகிற வைத்தது. போட்ட பட்ஜெட்டை தாண்டி கூடுதலாக வந்த போதும் படத்தை பாதியிலே விடக்கூடாது என்று எண்ணிய கமல் கூடுதலான தொகையை ஒதுக்கி சிக்கனமாக செலவு செய்ய சொல்லி அட்வைஸ் செய்தாராம். 

சமீபத்தில்  சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அமரன் என பெயரிடப்பட்டு டீசர் ஒன்றையும் வெளியிட்டது. டீசர் வெளிய வந்த நாளிலிருந்து படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். படமாக்கப்பட்ட விதம் சர்ச்சைக்குரிய வசனங்கள் என பலவாறு கூறி படத்தை வெளியிடக் கூடாது என ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணம் இருந்தது. 

ஒரு வழியாக அனைத்தையும் சமாளித்து படப்பிடிப்பை முடித்துவிட்ட  ராஜ்கமல் பிலிம்ஸ் இறுதியாக சுதந்திர போராட்டத்தை முன்னிட்டு அமரன் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இதன் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ்  நிறுவனம் 60 கொடி கொடுத்து வாங்கி உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுடன் கம்பேர் பண்ணும் போது இது குறைந்த தொகையை ஆகும். இதனால் ரொம்ப அப்செட் ஆகிவிட்டாராம் கமல்.

Also read: ராணுவத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு போன ஈமெயில்.. வந்த கரும்புள்ளியால் பதறிப்போய் ஆண்டவர் அடித்த அந்தர்பல்டி

Trending News