சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அம்மா இருக்கும்போதே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குனர்.. பதறிப் போன நடிகை

பெண் குழந்தைகளுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லை என்பது சமீபகாலமாக நடந்து வரும் கொடூர சம்பவங்கள் மூலம் அதிர்ச்சி அடைய செய்கிறது. இந்நிலையில் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் தலை தூக்கி உள்ள நிலையில் அம்மா முன்னிலையிலையே நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டிருக்கிறார் இயக்குனர்.

அதாவது நடிகை ஒருவர் வாய்ப்புக்காக இயக்குனரை நாடி இருக்கிறார். அப்போது அவருடைய அம்மாவும் உடன் இருந்த நிலையில் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால் சில அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். நடிகையோ சினிமாவுக்கு புதிது என்பதால் அப்போது அட்ஜஸ்மென்ட் என்றால் என்ன என்பது தெரியவில்லை.

இதனால் சம்பளம் மற்றும் வேறு ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் என்று நினைத்திருக்கிறார். ஆகையால் உடனே அவரது அம்மாவும் சம்பளம், சாப்பாடு ஆகியவற்றில் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு தான் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி விரிவாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

Also Read : சினிமால இருந்து சீரியல் போய் மீண்டும் செம கம்பேக் கொடுத்த 5 நடிகைகள்.. சித்தி ஆடும் ஆடுபுலி ஆட்டம்

அதுவும் தன்னை மட்டுமல்லாமல் படத்தில் உள்ள ஹீரோவையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் அம்மா மகள் இருவருமே அதிர்ந்து போய் விட்டார்களாம். உடனே அந்தப் பட வாய்ப்பு வேண்டாம் என்று கூறிவிட்டு வந்து விட்டார்களாம்.

அதேபோல் நிறைய படங்கள் வாய்ப்புகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையால் இழந்துள்ளதாக நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் திறமை இருந்தும் பல நடிகைகள் தற்போது வரை சரியான அங்கீகாரம் கிடைக்காததற்கு இது போன்ற சில நபர்களும் காரணம் என்று கூறியுள்ளார்.

Also Read : வாரிசு நடிகையின் 14 வருட ரகசிய காதல்.. புளியங்கொம்பாக பிடித்த முதிர் கன்னி

Trending News