செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இமேஜை மொத்தமாக காலி செய்த இயக்குனர்.. வேர்ல்ட் ஹீரோவுக்கு செக் வைத்த சேனல்

Gossip: தற்போது வேர்ல்ட் ஹீரோவின் இமேஜ் மொத்தமாக சரிந்து போய் கிடக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் ரசிகன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகருக்கு அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது.

அதை வைத்து அடுத்தடுத்த படங்களை அறிவித்த நடிகர் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியிலும் தன்னுடைய சம்பளத்தை டபுள் ஆக்கினார். சேனல் தரப்பும் நடிகரின் மாசை புரிந்து கொண்டு கணக்கு பார்க்காமல் காசை கொடுத்தார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்ற நடிகர் இடையில் சில அரசியல் காரணமாக தடுமாற ஆரம்பித்தார். அதிலும் அந்த லூஸ்டாக் நடிகருக்கு செய்த அநியாயம் தான் கர்மாவாக சுற்ற ஆரம்பித்தது.

நடிகரின் இமேஜை பதம் பார்த்த படம்

இதனால் மக்களின் அதிருப்தியைப் பெற்ற நடிகருக்கு கெட்ட பெயர் தான் கிடைத்தது. அதனாலேயே நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியேறி விட்டதாக தகவல் கசிந்தது. ஆனால் அதில் உண்மை கிடையாது. இது வேற விவகாரம் என்கின்றனர்.

சமீபத்தில் நடிகரின் படம் வெளியாகி தலைக்குப்பற கவிழ்ந்தது. நண்டு சிண்டெல்லாம் கலாய்க்கிற அளவுக்கு ஆயிடுச்சு என்பது போல் இருந்தது நடிகரின் நிலை. இதனால் அந்த நிகழ்ச்சியில் சம்பளத்தை ஏத்த முடியாத சூழலும் உருவானது.

அது மட்டும் இன்றி இதனால் நிகழ்ச்சி தடுமாறுமா என்ற சந்தேகமும் நடிகருக்கு வந்திருக்கிறது. அதனாலேயே தன்னுடைய பணிகளை காரணம் காட்டி அவர் விலகி இருக்கிறார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

நடிகரை காலி செய்த பிரம்மாண்ட இயக்குனர்

Trending News