செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

விஜய், அஜித்திற்காக கதை எழுதி காத்திருந்த ஹிட் இயக்குனர்.. இறக்கும் வரை நிறைவேறாத ஆசை

Vijay Director: இளம் இயக்குனர்கள் முதல் மூத்த இயக்குனர்கள் வரை அஜித் விஜய் வைத்து இயக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் ஏற்கனவே விஜய்யின் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒரு படத்தை ஹிட் கொடுத்த இயக்குனர் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக கதை எல்லாம் தயார் செய்து வைத்து காத்திருந்தார்.

ஆனால் திடீரென்று அவர் மரணித்ததால் கடைசி வரை அவர் ஆசை நிறைவேறாமலே போனது. அது மட்டுமல்ல அந்த இயக்குனர் அஜித்தை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டும் எடுத்து விட வேண்டும் என மிகுந்த ஆசையுடன் கதையையும் தயார் செய்து வைத்து காத்திருந்தாராம்.

Also Read: கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

இயக்குனர் சித்திக் விஜயை வைத்து பிரண்ட்ஸ், காவலன் என வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இவரைப் பற்றி பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் தோழனாக நடித்த இயக்குனர் ரமேஷ் கண்ணா இதைப் பற்றி பேசி இருக்கிறார்.

இயக்குனர் சித்தி உடன் ரமேஷ் கண்ணா பேசும்பொழுது, பிரண்ட்ஸ் 2 படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் அதற்கு கதை தயார் செய்து விட்டேன் கூடிய விரைவில் விஜய்யை வைத்து படத்தை ஆரம்பித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் ரொம்ப காலம் அஜித்தை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போய்விட்டது.

Also Read: லியோ கிளைமாக்ஸ்ஸில் அதிரடியான சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்.. 1000 கோடி வசூலை பார்க்காமல் விடமாட்டேன்

அவருக்கும் கதை தயார் செய்து விட்டேன், அவரிடமும் சொல்லி படத்தை எடுத்து விடுவேன் என சந்தோஷமாக கூறியிருக்கிறார் இயக்குனர் சித்திக். இந்த இரண்டு ஆசையும் நடந்திருந்தால் நல்ல திரைப்படம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் ஆசை நிறைவேறாமலேயே இறந்து போய்விட்டார்.

அவருடைய கனவு நிறைவேறாமலே போய்விட்டது. இப்படி நல்ல நல்ல இயக்குனர்களின் கதை அவர்களுடன் செத்துப் போய் விடுவது. தமிழ் சினிமாவிற்கு நல்லதல்ல டாப் நடிகர்கள் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களை போலவே, நல்ல கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது இயக்குனர் ரமேஷ் கண்ணாவின் ஆதங்கம்.

Also Read: தளபதி 68 கதையை விட மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருக்கு.. கங்கை அமரன் கூறிய ட்விஸ்ட் இது தான்!

- Advertisement -spot_img

Trending News