வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களில் இவர் நடித்தாலும் அவரின் ஒரு சில கதாபாத்திரங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படி ஒரு கதாபாத்திரம் தான் கிரி திரைப்படத்தில் வரும் வீரபாகு கேரக்டர். சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன், ரீமாசென், பிரகாஷ்ராஜ், தேவயானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிலும் வடிவேலுவின் அந்த வீரபாகு கேரக்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதில் ஒரு காட்சியில் வடிவேலு, என் அக்காவை வைத்து தான் இந்த பேக்கரியை வாங்கி போட்டேன் என்று அர்ஜுனிடம் கூறுவது போன்று இருக்கும்.
முதலில் அந்த காட்சியில் நடிப்பதற்கு வடிவேலு ரொம்பவே தயக்கம் காட்டி இருக்கிறார். சொல்லப்போனால் அந்தக் காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று ரொம்பவும் பிடிவாதம் பிடித்திருக்கிறார். ஆனால் சுந்தர் சி தான் அவரிடம் சமாதானமாக பேசி எப்படியோ அதில் நடிப்பதற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.
அதன் பிறகு வடிவேலுவும் அரை மனதாக அந்த காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் படம் வெளிவந்த பிறகு அந்த காட்சி தான் பலராலும் ரசிக்கப்பட்டது. அதன் பிறகு வெளியிடத்தில் கணபதி பேக்கரி என்ற கடையை பார்த்தால் கூட பலருக்கும் வடிவேலுவின் காமெடி காட்சி தான் நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு அந்த வீரபாகு கதாபாத்திரமும், காமெடி காட்சியும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் அந்த காட்சியில் நடிக்க வடிவேலு எப்படி எல்லாம் சங்கடப்பட்டார் என்பதை சுந்தர்சி தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அந்த கேரக்டருக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Also read:வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்