வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்த நடிகைக்கு நடிப்பு வராது என வெறுத்த இயக்குனர்.. விஜய்யுடன் கெமிஸ்ட்ரியில் நெத்தியடி கொடுத்த ஹீரோயின்

பொதுவாகவே விஜய் படம் என்றால் அது கண்டிப்பாக வெற்றி அடையும் என்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால் இவரது படங்களில் ரொமான்ஸ், சண்டை, டான்ஸ், நகைச்சுவை என்று அனைத்தையும் ஒரே ஆளாக நடித்துக் காட்டுவதில் இவருக்கு இணையாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். முக்கியமாக இவர் ரொமான்ஸ் செய்யும் அழகுக்கு அவ்வளவு ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர் ரொமான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படங்கள் ஏராளமாக இருக்கிறது. அப்படி இவர் நடித்த ஒரு படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக ஆனது. ஆனால் அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்று இயக்குனர் இவரை வெறுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த நடிகைக்கு நடிப்பு வரமாட்டுக்கு என்று தயாரிப்பாளர் இடமும் கூறி வேற ஹீரோயினை போடுங்கள் என்று சிபாரிசு செய்திருக்கிறார்.

Also read: விஜய் , அஜித்தால் வந்த பிரச்னை.. சிம்புவுக்கு கண்டிஷன் போட்ட உதயநிதி

ஆனால் தயாரிப்பாளர் இந்த கதை படி இவர் நடித்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சொல்வதை பொருட்படுத்தாமல் உறுதியாக இந்த நடிகையை நடிக்க வைத்திருக்கிறார். அதே போல் அவர் நடிப்பால்தான் படமே சூப்பர் ஹிட்டாகி விஜய்க்கும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்பு அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அவர் வேறு யாருமில்லை நடிகை ஷாலினி தான்.

இவர் நடித்த முதல் காட்சியை பார்த்த இயக்குனர் பாசில் இவருக்கு நடிப்பு வராது என்றும் சரியாக நடிக்க தெரியவில்லை என்றும் அதனால் இந்த படத்திற்கு இவர் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். பின்பு தயாரிப்பாளர் சங்கிலி முருகன் இவர் சொல்வதைக் கேட்காமல் இவர் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

Also read: விஜய்யை தூக்கி எறிந்த ஜோதிகா.. படபிடிப்பில் சொல்லாமல் போன கொடுமை, வருத்தப்பட்ட தளபதி.!

அவர் சொன்னபடியே கடைசியாக ஷாலினி நடித்து விஜய்யுடன் கெமிஸ்ட்ரியில் பின்னி பெடல் எடுத்து அனைவரையும் வாயை பிளக்க செய்திருப்பார். அத்துடன் இந்த கேரக்டருக்கு இவர்தான் சூட் ஆகும் வேறு யாரு நடித்திருந்தாலும் நன்றாக இருக்காது. என்று சொல்லும் படியாக ஷாலினி நடித்து இயக்குனருக்கு நெத்தியடி கொடுக்கும் விதமாக நடித்துக் காட்டி விட்டார்.

மேலும் விஜய்க்கு இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல காலம் பிறந்து விட்டதாகவே அமைந்தது. அடுத்ததாக ஷாலினிக்கும் இதைத்தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் நல்ல ஹோம்லி நடிகையாகவும் நடித்து இவருக்கு என்று தனி ரசிகர்களை பிடித்து விட்டார்.

Also read: விஜய்க்கு கனகச்சிதமாக பொருந்திய 5 நடிகைகள்.. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இடுப்பழகி சிம்ரன்

Trending News