சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹீரோ போட்ட பட்ட நாமம்.. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடனில் சிக்கிய இயக்குனர்

பிரபல ஹீரோவை நம்பி பலபேர் இப்போது தர்ம சங்கடத்தில் மாட்டி விழி பிதுங்கி வருகின்றனர். அதில் அந்த இயக்குனரின் நிலை தான் ரொம்பவே பரிதாபகரமாக இருக்கிறது.

ஆல் ரவுண்டராக இருக்கும் அந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தார் அந்த இயக்குனர். ஆனால் ஹீரோவோ நாளை கடத்தி வருகிறார்.

அதனாலேயே இந்த படம் ஆரம்பிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இருந்தாலும் இயக்குனர் கெத்தாக சுற்றி வந்ததோடு பெருந்தொகைக்கு ஒரு இடத்தையும் வாங்கி போட்டாராம்.

ஏற்கனவே கொடுத்த படம் தாறுமாறு ஹிட் அடித்ததில் அந்த காசை அப்படியே நிலத்தில் முதலீடு செய்து இருக்கிறார். அதை அடுத்தது இந்த ஹீரோவை வைத்து வீட்டை கட்டிவிடலாம் என்று பிளான் போட்டு இருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்பே வங்கியில் ஏகப்பட்ட கடனை வாங்கி சொகுசு வீட்டை கட்டிவிட்டாராம். எப்படியும் படம் ஆரம்பித்து பணம் வந்தால் ஒரே செட்டில்மெண்டில் கடனை அடைத்து விடலாம் என நினைத்திருக்கிறார்.

ஆனால் படம் இன்னும் ஆரம்பித்த பாடில்லை. இதனால் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என இயக்குனர் நொந்து போயிருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட கடன் சுமையிலும் சிக்கிவிட்டார். ஹீரோவும் மற்ற வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதனால் சோர்ந்து போன இயக்குனர் எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என மனக்கவலையில் இருக்கிறாராம்.

Trending News