சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிப்பு, இயக்கம் இரண்டையும் கைவிடப் போகும் இயக்குனர்.. அனிருத்துக்கே டஃப் கொடுக்கும் திட்டம்

தமிழ் சினிமாவை தற்சமயம் ரணகளம் செய்து கொண்டிருக்கும் முன்னணி இளம் இசையமைப்பாளர் தான் அனிருத். இவர்தான் இப்போது டாப் நடிகர்களின் படங்களின் முதல் தேர்வாக இருக்கிறார். இவருக்கே டஃப் கொடுக்கும் திட்டத்தில் நடிகரும் இயக்குனருமான பிரபலம் ஒருவர் இசையமைப்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இவர் ஏற்கனவே இயக்குனராக தனித்துவமான இயக்கத்தில் பெயர் எடுத்தவர். இயக்கம், நடிப்பு ரெண்டையும் விட்டுவிட்டு வேறு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அப்பா நன்றாக பாடக்கூடிய ஒரு பாடகராம். இவரும் நன்றாக பாடக்கூடிய ஒரு இயக்குனர் தான்.

Also Read: இயக்குனர் என்பதை மறந்து நடிப்பில் இறங்கிய 5 பிரபலங்கள்.. வில்லனாய் மாறிய கௌதம் மேனன்

யுத்தம் செய், அஞ்சாதே போன்ற படத்தை இயக்கியவர் மிஷ்கின். ‘கத்தாழை கண்ணால குத்தாத’ என்ற பாடல் தான் மிஷ்கின் பாடிய முதல் பாடல். இப்பொழுது இவர் இசையமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். டெவில் என்ற படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா தான் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் விதார்த், பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வித்தியாசமான திரில்லர் பாணியில் உருவாகிறது. அதற்கு மிஷ்கின் இசை முக்கிய பங்காற்றும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

Also Read: மொத்தமாக சுத்தலில் விடும் லோகேஷ்.. அர்ஜுனுக்கும், சஞ்சய் தத்துக்கும் உள்ள தொடர்பு

அது மட்டுமல்ல டெவில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக மிஷ்கின், அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இயக்குனராகவும் நடிகராகவும் மிரட்டிய மிஷ்கின் இசையமைப்பாளரா! என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் தகவலாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இசையமைப்பாளர்கள் நடிகர்களாகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது நடிகராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டிய ஒரு இயக்குனர், இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல போகிறபோக்கில் அனிருத்துக்கே டஃப் கொடுக்கும் திட்டம் போட்டு விடுவார் போல் தெரிகிறது.

Also Read: கவினுக்காக விட்டுக் கொடுத்த மிஷ்கின்.. வெளியில முரடாக இருந்தாலும் தங்கமான மனசு

Trending News