வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி கொடுத்த டார்ச்சரால் கடுப்பான இயக்குனர்.. இனி உங்க சவகாசமே வேண்டாம் என்று ஓடிய சம்பவம்

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் லைக்கா ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இதனால் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட் படமான டான் படத்தை கொடுத்த சிபி சக்கரவர்த்தி ரஜினியிடம் ஒரு கதை சொல்லி உள்ளார். ஆகையால் சிபி சக்கரவர்த்தி, ரஜினி, லைக்கா இணைவது கிட்டத்தட்ட உறுதியான விஷயமாக கூறப்பட்டது. ஆனால் இதில் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also Read : இன்றுவரை மாறாத விஜய், ரஜினி.. இவர்களின் கெட்ட பழக்கத்தால் பாதிக்கப்படும் நடிகைகளின் கேரியர்

அதாவது இந்த படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் இயக்குனர் என பலர் கூறி வந்தாலும் ரஜினி மீதும் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. கமல் விக்ரம் படத்தின் மூலம் தரமான ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக லோகேஷை நம்பி கமல் இறங்கி இருந்தார்.

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி இடம் ரஜினி விக்ரம் படத்தைப் போல ஒரு ஆக்சன் கதையை கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார். இதற்காக இயக்குனரும் இரண்டு, மூன்று மாதங்கள் கஷ்டப்பட்டு கதையை ரெடி பண்ணி ரஜினியிடம் கூறியுள்ளார். ஆனால் இப்போது ரஜினி இந்த கதை வேண்டாம் குடும்பம் சம்பந்தமான கதை பண்ணலாம் என்று சொல்லிவிட்டாராம்.

Also Read : ராஜமவுலி குடும்பத்தால் பரிபோன ரஜினி பட வாய்ப்பு.. புலம்பி தவிக்கும் டான் பட இயக்குனர்

இதை கேட்ட சிபி சக்கரவர்த்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரஜினி படத்தை நான் பண்ண போவதில்லை என்று கூறிவிட்டார் சென்று விட்டாராம். மேலும் ரஜினிக்காக அவர் ரெடி பண்ணிய கதையில் வேறு ஒரு ஹீரோவை போடலாம் என்று யோசித்து வருகிறாராம்.

ஆனால் சிபி சக்கரவர்த்திக்கு இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாரின் பட வாய்ப்பு கிடைத்தும் தற்போது கைநழுவி போயி உள்ளது. ஆனாலும் மனம் தளராத சிபி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக மாஸ் ஹீரோவை வைத்து அதே கதையில் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட உள்ளாராம்.

Also Read : அப்பாவின் செயல் கொஞ்சம் கூட மகனிடம் இல்லை.. ரஜினி, கமல் படங்களுக்கு யுவன் இசையமைக்காத காரணம் இது தான்

Trending News