வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அஜித் CM ஆவது உறுதி.! அவர் சுயம்பு மாதிரி, 100% அடித்துக் கூறும் அவள் வருவாளா ராஜ்கபூரின் காரணம்

Actor Ajith: சினிமாவில் எந்த ஒரு பேக்ரவுண்ட்டும் இல்லாமல் இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் அஜித். அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவது உறுதி என்று 100% அடித்து சொல்கிறார் பிரபல இயக்குனர் ராஜ்கபூர். அஜித்தின் சினிமா கேரியரை புரட்டி போட்ட இரண்டு படங்கள் தான் அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே.

இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் தான். இவர் அஜித்தை மட்டுமல்ல பிரபு, முரளி, கார்த்திக், சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்ட டாப் ஹீரோக்களை வைத்து நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராக தான் ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பிருக்கிறது.

அதிலும் விசில் படத்தில் இவர் நடித்த பாஜி கேரக்டர் 90ஸ் கிட்ஸ்களால் அதிகம் பேசப்பட்டது. அத்துடன் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் ராஜ்கபூரின் சென்டிமென்ட் ஆன ஆக்டிங்கை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ராஜ்கபூர் அளித்த பேட்டியில், அஜித் உச்ச நட்சத்திரமாக வருவார் என அப்பவே நான் கூறினேன். அவர் ஒரு சுயம்பு, இன்னும் அஜித் அரசியலுக்கு விதை போடவில்லை.

Also read: விஜய்யின் தலைக்கணக்கத்துக்கு அஜித் வைக்கப்போகும் ஆப்பு.. ஃபார்முலாவை மாற்றிய ஏகே..!

ஒருவேளை அரசியலில் அவர் கவனம் செலுத்தினால், அவர் தான் அடுத்த CM என 100 சதவீதம் அடித்து சொல்கிறார். இதற்குக் காரணம் அஜித்தின் ஜாதகம் அந்த மாதிரி. ஒருவேளை அஜித் பிற்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பு இருந்தால், அவர் CM ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராஜ்கபூர் திட்ட வட்டமாக கூறுகிறார்.

ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில் இவர் பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் சென்னை மாநகரம் இப்போது மிகவும் புயலால் நிலைகுலைந்து இருக்கிறது. ஆனால் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. ஆனால் வெள்ளத்தில் சிக்கிய அமீர் கானை மட்டும் நேரில் சென்று சந்தித்து அவரை கமிட்டி ஹாலில் தங்க வைக்க உதவி செய்திருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. இந்தி நடிகருக்கு மட்டும் ஓடோடி உதவி செய்த அஜித், தன்னை வாழ வைத்த சென்னை மக்களுக்கும் உதவி செய்திருக்கலாம் என்று கொந்தளிக்கின்றனர். இதையெல்லாம் பார்த்தால் அவர் நிச்சயம் CM ஆக வாய்ப்பே இல்லை என்று ராஜ்கபூரை நெட்டிசன்கள் திட்டி தீர்க்கின்றனர்.

Also read: அமீர்கானுக்கு மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா.? அஜித்தை அவமானப்படுத்தி வசமாக சிக்கிய நடிகர்

Trending News