ஆசை காட்டி மோசம் செய்யும் அஜித்.. விக்னேஷ் சிவன் லிஸ்டில் இணையும் இயக்குனர்

Ajith-Vignesh Sivan: பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களை இயக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. அப்படித்தான் அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு அந்த கனவும் நிறைவேறியது. ஆனால் திடீரென அவர் நிராகரிக்கப்பட்டது இன்று வரை ஒரு விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

அவருக்கு பதிலாக தற்போது விடாமுயற்சியை மகிழ்திருமேனி இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இடத்தை பிடிக்கவும் ஒரு இயக்குனர் தயாராகி வருகிறார். அதாவது அஜித்தின் 63 வது படத்தை மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கிறது.

நேர்கொண்ட பார்வையின் போது ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி இருந்த இவருக்கு ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது அதன்படி மார்க் ஆண்டனி வசூலில் பட்டையை கிளப்பிய நிலையில் அஜித் சொன்ன வாக்கை நிறைவேற்றவும் தயாராகிவிட்டார்.

இதனால் ஆதிக் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறாராம். ஆனால் ஆசை காட்டி மோசம் செய்யும் வகையில் எப்போது வேண்டுமானாலும் இந்த வாய்ப்பு பறிக்கப்படலாம். ஏனென்றால் மார்க் ஆண்டனி வசூல் வேட்டையாடி இருந்தாலும் கதையை பொறுத்தவரையில் சுமார் ரகம் தான்.

அதிலும் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக நகர்கிறது. சுவாரஸ்யம் என்று பார்த்தால் சில்க் வரும் காட்சியும், எஸ் ஜே சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் தான். இது மட்டும் இல்லை என்றால் மார்க் ஆண்டனி விஷாலுக்கு ஒரு தோல்வி படமாக தான் அமைந்திருக்கும்.

ஆனால் அஜித் கதை விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்கக் கூடியவர். அதன் காரணமாகவே விக்கிக்கு வந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் கதை விஷயத்தில் கோட்டை விட்டால் நிச்சயம் விக்னேஷ் சிவனுக்கு அருகில் அவருக்கான இடம் காத்திருக்கும். அந்த வகையில் ஏகே 63 படப்பிடிப்பு தொடங்கும் வரை இயக்குனர் யார் என்பது ட்விஸ்ட் ஆக தான் இருக்கும்.