ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

போற இடமெல்லாம் அஜித் துதி பாடும் இயக்குனர்.. விடாமுயற்சிக்குப் பின் வாய்ப்பு கொடுப்பாரா ஏகே?

Actor Ajith: ஒரு ஹிட் கொடுத்து இத்தனை மாதங்கள் ஆன பிறகும் அஜித் இன்னும் அடுத்த படத்தை தொடங்காமல் இருக்கிறார். எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டிய விடாமுயற்சி இப்போது வரை இன்னைக்கு, நாளைக்கு என இழுத்தடித்து வருகிறது.

ஆனாலும் இந்த மாத கடைசியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ அதன் சூட்டிங் தொடங்கிவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் மார்க் ஆண்டனி பட இயக்குனர் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கலாம் என காத்திருக்கிறாராம்.

Also read: ரொம்ப ஆசைப்பட்டு அஜித் ரீமேக் செய்ய சொன்ன படம்.. இயக்குனரால் கிடைத்த ஏமாற்றம்

இப்படி அவர் நம்பிக்கையோடு இருப்பதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது நேர்கொண்ட பார்வையில் நடித்த போது ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அது அவருக்கும் ரொம்ப பிடித்து போய் இருக்கிறது.

இருந்தாலும் ஒரு பெரிய ஹிட்டை கொடுத்துட்டு வாங்க. அப்புறம் நாம இணைந்து படம் பண்ணலாம் என்று அஜித் இயக்குனரிடம் கூறியிருக்கிறார். அந்த வெறியோடு உழைத்தவருக்கு மார்க் ஆண்டனி மிகப்பெரும் வெற்றியை தேடி கொடுத்திருக்கிறது.

Also read: ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடி.. விடாமுயற்சிக்காக ஸ்மார்ட்டாக மாறிய அஜித்தின் நியூ லுக்

விஷால், எஸ் ஜே சூர்யாவின் கூட்டணியில் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் ஆதரவோடு 53 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இப்போது ஆதிக் எங்கு போனாலும் அஜித் துதி தான் பாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அடுத்த படம் எங்களுக்கு தான் பண்ணனும் என சிறுத்தை சிவா உட்பட பல இயக்குனர்கள் அஜித்துக்காக லைனில் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு கொடுத்த வாக்கை ஏகே காப்பாற்றுவாரா அல்லது டீலில் விட்டு விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி தொடங்குவது உறுதி.. மொத்தமா டிக்கெட் வாங்கிய பட குழு

Trending News