வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டாரால் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இயக்குனர்.. சிவகார்த்திகேயன் நண்பனுக்கு இப்படி ஒரு நிலைமையா.?

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தற்போது அயலான் மற்றும் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்து அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் இப்போது பட வாய்ப்பு இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்.

இதற்கு காரணம் சூப்பர் ஸ்டாரின் நிராகரிப்பு தான் என்று கூறப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது டாக்டர் மற்றும் டான் படங்கள். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

Also Read : ஊரு ஃபுல்லா கடன வச்சுக்கிட்டு எப்படி கலர் கலரா ரீல் விடுறீங்க! பேராசையில் இருக்கும் சிவகார்த்திகேயன்

இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கியவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. அறிமுக இயக்குனரான இவர் முதல் படத்திலிருந்து பாராட்டைப் பெற்றார். அதன் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதுவும் சூப்பர் ஸ்டாரே கூப்பிட்டு சிபி சக்ரவர்த்தி இடம் கதை கேட்டுள்ளார். ஆனால் இயக்குனரின் ஆட்டிட்யூட் சரி இல்லாத காரணத்தினால் இந்த பட வாய்ப்பு அவரை விட்டு நழுவிச் சென்றது அதுமட்டுமின்றி சம்பளமும் அதிகப்படியாக எதிர்பார்த்து இருக்கிறார்.

Also Read : பல கோடிகளில் புரளும் முதல் 8 நடிகர்கள்.. சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

இதனால் ரஜினி பட வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு இல்லாமல் போனது. மேலும் இப்போது வரை எந்த நடிகரின் பட வாய்ப்பு இல்லாமல் சிபி சக்கரவர்த்தி திணறி வருகிறார். ஆரம்பத்திலேயே ஆட்டிட்யூட் காட்டாமல் இருந்திருந்தால் ரஜினியின் பட வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அதுமட்டுமின்றி ரஜினியின் படத்தை இயக்கினால் அவரது சினிமா கேரியரே எங்கேயோ போயிருக்கும். ஆனால் இதை நழுவ விட்டுவிட்டு இப்போது சாதாரண நடிகர்களின் படங்கள் கூட கிடைக்காமல் அவதி படுகிறார். திறமை இருந்தும் ஓவர் ஆட்டிட்யூடால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

Also Read : உதயநிதியை பகடை காயாய் பயன்படுத்தும் சிவகார்த்திகேயன்.. நரியை மிஞ்சிய தந்திரம்

Trending News