திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அட்லீக்கே டஃப் கொடுக்கும் மாவீரன் இயக்குனர்.. இத்தனை படத்தில் இருந்து காப்பியா?

Maaveeran: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயனின் முந்தைய படமான பிரின்ஸ் படம் தோல்வி உற்றதால் இந்த படத்தை பெரிதும் நம்பு இருந்தார்.

அவர் நினைத்தது போலவே படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. மேலும் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு குரல் கொடுத்தது சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனாலும் ஒரு பக்கம் வசூலை பெற்றாலும் நெட்டிசன்கள் மாவீரன் படத்தை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

Also Read : சூறாவளியாக வசூலில் வேட்டையாடி வரும் மாவீரன்.. 5 நாளிலே பண மழையில் ஃபேன்டசி தயாரிப்பாளர்

அதாவது அட்லீயின் ஒவ்வொரு படத்திலும் சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கும். பல படங்களில் பார்த்த காட்சியை தனது படங்களில் வைத்து எடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அவருடைய முதல் படமான ராஜா ராணி படம் தொடங்கி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ஜவான் படம் வரை இந்த சர்ச்சை போய்க் கொண்டு தான் இருக்கிறது.

இந்த சூழலில் மடோன் அஸ்வினின் மாவீரன் படமும் பல படத்தில் இருந்து பிட்டு பிட்டாக காட்சிகள் எடுத்து ஒன்றாக இப்படத்தை எடுத்துள்ளார் என கிண்டல் அடித்து வருகிறார்கள். இந்த படம் மொத்தமாக ஹாலிவுட் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சொன்னாலும் சில காட்சிகள் வேறுபடுத்துடன் இணைத்து வைத்து பேசி உள்ளார்கள்.

Also Read : விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

அதிலும் குறிப்பாக இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அதாவது குப்பத்தில் வாழும் இளைஞனாக சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நடித்தது போல முதல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் இடிந்து விழும் கட்டடத்தில் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்றுவது டாக்டர் படத்துல இருந்து சுடப்பட்டது.

மேலும் ஹீரோவாக இருந்தும் பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பது சந்தானத்தின் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது. தரமற்ற கட்டிடங்கள் இடிந்து விழுவது விஜயகாந்தின் ரமணா படத்திலிருந்து சுடப்பட்டது என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : யோகி பாபு கதையை திருடிய சிவகார்த்திகேயன்.. மட்டமாக வெற்றியை பார்க்க துடிக்கும் கொடுமை

- Advertisement -

Trending News